லைஃப்ஸ்டைல்

அஷ்டாங்க நமஸ்காராசனம்

Published On 2018-06-19 03:02 GMT   |   Update On 2018-06-19 03:02 GMT
இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.
பெயர் விளக்கம் : ‘அஷ்டாங்க’ என்றால் எட்டு அங்கம் என்றும் ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.

செய்முறை : கால்விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி வணங்குவதால், இது அஷ்டாங்க நமஸ்காராசனம். முழங்கால்களை தரையில் ஊன்றி உடலை முன்புறம் நீட்டவும். வயிறு மட்டும் தரையில் படாமல் இருக்க வேண்டும். வெளியே மூச்சுவிடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம் : எட்டு அங்கங்களை தரையில் தொடும்படி செய்வதன் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக்குறிப்பு : இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி இருக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் வயிற்றை தரையில் படாதவாறு வைத்து இடுப்பை மேலே தூக்கி உடலின் எட்டு அங்கங்களையும், தரையில் தொட இயலாதவர்கள் முழு உடலையும் தரையில் படும்படி படுத்த நிலையில் வைத்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம்.

பயன்கள் : கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும். 
Tags:    

Similar News