லைஃப்ஸ்டைல்

உடற்பயிற்சியை இடையில் நிறுத்த வேண்டாம்

Published On 2018-05-12 07:41 GMT   |   Update On 2018-05-12 07:41 GMT
எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.
உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். உடற்பயிற்சியைச் சில நாட்கள் செய்ததும் மனம் அதைவிட்டுவிட ஏதாவது காரணங்கள் தேடும். சளிப்பிடித்திருக்கிறது, மழை பெய்கிறது, வானிலை மோசம், வேலை நேரத்தில் உடல் சோர்வாகிறது, உடல் வலிக்கிறது, நேர மேலாண்மை பாதிக்கப்படுகிறது எனக் காரணங்களை உருவாக்கி உடற்பயிற்சி செய்வதை நிறுத்தத் தூண்டும்.

உடற்பயிற்சியைக் கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் இந்த தொடக்கநிலை தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, விழிப்பாய், பிடிவாதமாய் இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.

உடற்பயிற்சி என்பது வாழ்வில் ஒரு அங்கம் என்று மாறும்போது நம் உடல் வலுவாக இருக்கும். நம்மை நாமே நேசிக்கத்தொடங்குவோம். அனைத்துவிதமான பாசிட்டிவ் மாற்றங்களுக்கும் உடற்பயிற்சி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வது என்பதைப் பாதியில் நிறுத்த வேண்டாம்.
Tags:    

Similar News