பெண்கள் உலகம்

தொப்பை, இடுப்பு சதையை குறைக்கும் யோகாசங்கள்

Published On 2018-02-24 09:56 IST   |   Update On 2018-02-24 09:56:00 IST
கீழே குறிப்பிட்டிருக்கும் சில யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை குறையும்; இடுப்பைச் சுற்றியிருக்கும் ஊளைச்சதைகள் குறையும்.
மற்ற பயிற்சிகளைப்போல் இல்லாமல் யோகா பயிற்சிகளில் மிக மெதுவாகத்தான் எடை குறையும். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பயிற்சிகளே உடல் எடையைக் குறைக்கப் போதுமானவை. ஒரே ஒருநாள் பயிற்சி செய்துவிட்டு, எடை மெஷினில் ஏறி நின்று எடை பார்ப்பது உதவாது. தினமும் தவறாமல் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

கீழே குறிப்பிட்டிருக்கும் சில பயிற்சிகளைச் செய்தால் தொப்பை குறையும்; இடுப்பைச் சுற்றியிருக்கும் ஊளைச்சதைகள் குறையும். யோகா பயிற்சிகளை ஏற்கெனவே தெரிந்துவைத்திருப்பவர்கள், அவற்றை வீட்டிலேயே செய்யலாம். ஆனால், புதிதாக கற்றுக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முறையாக யோகா செய்வதே சிறந்தது.

பாதஹஸ்தாசனம் :

நின்று கொண்டு செய்யும் பயிற்சி. நேராக நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, மூச்சை வெளியிட்டபடி முன்னோக்கி வளைய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்தால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு குறையும்.

ஜானுசிரசாசனம்  :

அமர்ந்த நிலையில் செய்யும் பயிற்சி. ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு, ஒரு காலை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி முன்னோக்கி வளைய வேண்டும். வளைந்து படத்தில் காட்டியுள்ளதுபோல் ஒரு கையால் இன்னொரு கையைப் பற்றிக்கொள்ள வேண்டும். 30 விநாடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும். இதேபோல் இரண்டு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி, தொப்பை குறைக்க உதவும்.



னமுக்தாசனம் :

படுத்த நிலையில் செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்து இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.  

தனுராசனம் :

குப்புறப்படுத்து செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் மடித்து கைகளால் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க மிக எளிமையாக செய்யக்கூடியது யோகா.

Similar News