லைஃப்ஸ்டைல்

மன அழுத்தம் குறைய தியானம், யோகா உதவும்

Published On 2018-02-22 05:53 GMT   |   Update On 2018-02-22 05:52 GMT
தியானம், யோகா ஆகியவற்றைச் செய்யும்போது, அவர்களை அறியாமலே, திட்டமிடாமலே, தமது உடல் நலனுக்குத் தேவையானதை மட்டுமே தேர்ந்தெடுப்பர்.
உணவு, மருந்து ஆகியவற்றோடு சிலவகைப் பயிற்சிகள் ஓய்வு, தூக்கம் ஆகியன சேர்ந்த ஒருங்கிணைந்த முறையை ஆயுர்வேதம் ஊக்குவிக்கிறது. உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும் இயைந்து, ஆரோக்கியமாக இருப்பதே முழுமையான ஆரோக்கியம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

“நோய் மனம் சார்ந்து வருவது; மனதில் உருவாகி, உடலில் வெளிப்படுவது” என்பதை இன்று அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொள்கின்றன. அதிக மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியன, சர்க்கரை அளவை அதிகப்படுத்துகின்றன; மன அழுத்தம் அதிகமாகும்போது, கார்டிசால், அட்ரிலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன; மேலும், மேலும் அதிகமாகும்போது இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகின்றது.

ஆகவே, மன ஒருமைப்பாடு நோயற்ற நிலைக்கு மிகவும் தேவை, மன ஒருமைப்பாட்டுக்கு, மன அழுத்தம் குறைய, தியானம், யோகா போன்றவை உதவும் (மன அழுத்தத்தை அதிகரிக்கம் ஹார்மோன்கள் சுரப்பு குறையும்; ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்) இவற்றோடு நல்ல ஓய்வும், தூக்கமும் இன்றியமையாதன.
யோகஷ்டா குரு கர்மணி என்று வேதம் கூறுகிறது; எந்த வேலையையும், உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும், ஒருங்கிணைந்து, செய்ய வேண்டும் என்பது இதல் பொருள்.

யோகா, தியானம் ஆகியன, இந்த ஒருங்கிணைப்புக்கு உதவுகின்றன. இதனால் உண்மையான குணமடைதல் நிகழ்கிறது. முறையாக, தியானம், யோகா ஆகியவற்றைச் செய்யும்போது, அவர்களை அறியாமலே, திட்டமிடாமலே, தமது உடல் நலனுக்குத் தேவையானதை மட்டுமே தேர்ந்தெடுப்பர். ரிஷிகளும், ஞானிகளும், கற்றுத் தேர்ந்ததைவிட, தியானம், தவம் மூலமாகவே, தெளிந்த ஞானம் பெற்றனர்.



யோகா

சிலவகை யோகப் பயிற்சிகள், குறைந்த முயற்சியில், நிறைந்த பலனைத்தருகின்றன. அவை

சூரிய நமஸ்காரம்

பஸ்சிம உத்தான ஆசனம்
வீரபத்ர ஆசனம்
உத்தித்த பாஷ்வ - கோண ஆசனம்
ஸேதுபந்த ஸர்வாங்காசனம்
ஜதா பரிவர்த்தாசனம், சவாசனம் ஆகியன
தகுந்த ஆலோசனையும், பயிற்சியும் பெற்று, பின்னர் பின்பற்றுவது நன்மை பயக்கும்.

உடற்பயிற்சி, பிரார்த்தனை

ஆயுர்வேதம், நவீன மருத்துவம் இரண்டுமே உடலுழைப்பு இல்லாத நிலையே, நீரிழிவு நோய் வருவதற்கும், கட்டுப்படுத்த முடியாததற்குமான முக்கியமான காரணங்களுள் ஒன்றாக சொல்கின்றன. உடல் உழைப்பு இல்லாத நிலையில் உடற்பயிற்சி அவசியமாகிறது. இன்று ஏரோபிக்ஸ் போன்று பலவகையான பயிற்சிகள் மக்களால் செய்யப்படுகின்றன. அவை நல்ல பலன் தருவனவாகவும் உள்ளன.

வேகமான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவையும் பலன் தரும்.
Tags:    

Similar News