லைஃப்ஸ்டைல்

உடற்பயிற்சிக்கும் யோகாசனங்களுக்கும் உள்ள வேறுபாடுகள்

Published On 2018-02-03 03:21 GMT   |   Update On 2018-02-03 03:21 GMT
உடற்பயிற்சிகள் உடல் சார்ந்து மட்டுமே விளைவுகளை ஏற்படுத்துபவை. யோகாசனங்கள் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பல நன்மைகளை அளிப்பவை.
உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால், உடற்பயிற்சிகள் (ரன்னிங், ஜிம் பயிற்சிகள் போன்றவை) உடல் சார்ந்து மட்டுமே விளைவுகளை ஏற்படுத்துபவை. யோகாசனங்கள் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பல நன்மைகளை அளிப்பவை.

உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிகளுக்கும் உள்ள இடையே வேறுபாடுகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

* உடற்பயிற்சிகள் செய்ய, போதிய இடமும் உபகரணங்களும் தேவைப்படும்.
யோகாசனப் பயிற்சிகளைச் செய்ய சிறிய இடமும் ஒரு யோகா மேட்டும் (பாய்) போதும்.

* உடற்பயிற்சிகளைச் செய்தபிறகு சுவாசத்தின் போக்கு சீரற்றுக் காணப்படும்.
யோகாசனப் பயிற்சிகள் செய்த பிறகு சுவாசம் சீராகவும், மெதுவாகவும் லேசாகவும் மாறும்.

* உடற்பயிற்சிகள் செய்யும்போது வேகமாகச் செய்ய வேண்டியிருக்கும். இதனால் தசைகள் தேய்மானமடையும், தசைகளில் நுண்ணிய கிழிசல் ஏற்படும்.
யோகாசனங்கள் மெதுவாகச் செய்யப்படுகின்றன. தசைகள் கிழிபட வாய்ப்பு மிகக் குறைவு.



* உடற்பயிற்சிகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், இதனால் பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சிக்குப் பிறகு அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிடுவதுண்டு.
யோகாசனப் பயிற்சிகள் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது, குறைவாகவே சாப்பிட்டாலும் நிறைவாக உணர்வீர்கள்.

* உடற்பயிற்சியைப் பொறுத்தவரை விழிப்புணர்வு என்பதற்கு முக்கியத்துவமில்லை. உடற்பயிற்சி செய்துகொண்டே ஒருவரின் மனம் எங்கோ அலைந்து திரிந்துகொண்டிருக்கலாம்.
யோகாசனம் என்பது விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது. உடலின் அசைவுகள், சுவாசம் மற்றும் எண்ணங்களை விழிப்புணர்வுடன் கவனித்துக்கொண்டே செய்ய வேண்டியவை யோகாசனப் பயிற்சிகள்.

* உடல்நிலை சரியில்லாத சமயங்களில் உடற்பயிற்சிகளைச் செய்வது கடினம். மேலும் வயதானவர்களும் உடற்பயிற்சிகள் செய்வது கடினம்.
யோகாசனங்களை எந்த வயதினரும் செய்ய முடியும். ஆசுவாசப் பயிற்சிகள் சிலவற்றை உடல்நலம் சரியில்லாதபோதும் செய்ய முடியும்.
Tags:    

Similar News