பெண்கள் உலகம்

மூட்டு, இடுப்பை வலுவாக்கும் பட்டாம்பூச்சி பயிற்சி

Published On 2018-01-31 08:51 IST   |   Update On 2018-01-31 08:51:00 IST
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தொடை, வயிறு - தொடை சேருமிடம், மூட்டு, இடுப்பு ஆகியவை வலுப்பெறும். முதுகுத்தண்டு வலுவடையும்.
பட்டாம்பூச்சி பயிற்சி (Butterfly pose)

தரையில் உட்கார்ந்து, இரு அடிப்பாதங்களையும் ஒன்றை ஒன்று தொடுவதுபோல சேர்த்துவைக்க வேண்டும். பாதங்களை உடலுக்கு எவ்வளவு நெருக்கமாக வைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு நெருக்கமாக வைத்துக்கொள்ளவும். இரு பாதங்களையும் இரு கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, பாதங்களைப் பிரிக்காமல், கால்களை பட்டாம் பூச்சியின் இறக்கைபோல மெதுவாக, மேலும் கீழும் அசைக்க வேண்டும். இந்தப் பயிற்சியை இரண்டு நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்: தொடை, வயிறு - தொடை சேருமிடம், மூட்டு, இடுப்பு ஆகியவை வலுப்பெறும். மலக்குடல் பகுதி சிறப்பாக வேலை செய்யும். உடல் சோர்வை நீக்கும்.



பட்டாம்பூச்சி பெண்டிங் போஸ் (Butterfly bending pose)

தரையில் உட்கார்ந்து, பாதங்களை ஒன்றை ஒன்று தொடுவதுபோல சேர்த்துவைக்க வேண்டும். கைகளை நன்கு உயர்த்தி, உள்ளங்கை எதிரில் இருப்பவரைப் பார்ப்பதுபோல வைக்க வேண்டும். இப்போது, கைகளை நீட்டியபடியே உடலை வளைத்து, உள்ளங்கையால் தரையைத் தொட்டு நிமிர வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: அடிவயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகளை ஆரோக்கியப்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத்தண்டு வலுவடையும். இனப்பெருக்க மண்டலம் உறுதியாகும்.

Similar News