லைஃப்ஸ்டைல்

உடல்வாகிற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்க

Published On 2018-01-17 04:19 GMT   |   Update On 2018-01-17 04:19 GMT
ஒவ்வொருவர் உடல்வாகும் ஒவ்வொரு மாதிரியானது. உங்கள் உடல்வாகின் இயல்பு எதுவெனத் தெரிந்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இன்று இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை எல்லாதரப்பினரும் ஜிம்முக்குப் படை எடுக்கிறார்கள். இப்போது ஜிம்முக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் எடை குறைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செல்கிறார்கள். இலக்குகள் இல்லாமல் ஜிம்மில் நுழைந்து கண்ட கண்ட வொர்க் அவுட்ஸ் எல்லாம் செய்துகொண்டிருப்பதால் உங்களுக்கு உடல்வலிதான் பரிசாகக் கிடைக்கும். 

ஒவ்வொருவர் உடல்வாகும் ஒவ்வொரு மாதிரியானது. உங்கள் உடல்வாகின் இயல்பு எதுவெனத் தெரிந்து அதற்கு ஏற்ப திட்டமிடுங்கள். அடுத்தவரைப் பார்த்து காப்பி அடிப்பது என்பது உடற்பயிற்சிகளைப் பொருத்தவரை மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

பொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால் நுரையீரல் உற்சாகமாக இருக்கும். உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஜிம்மில் சிறப்பாகச் செயல்பட முடியும். காலையில் செய்ய நேரம் இல்லை என்றால் மாலையில் வொர்க் அவுட் செய்வது நல்லது. வொர்க் அவுட் செய்யும் முன் வெறும் வயிற்றில் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்த பிறகு வொர்க் அவுட் செய்யலாம். 

ஜூஸ் போன்ற பானங்கள் பருகியிருந்தால் ஒரு அரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். ஹெல்த் ட்ரிங்ஸ் சாப்பிடுபவர்கள் ஜிம் ட்ரெய்னரின் பரிந்துரைப்படி செயல்படுவது நல்லது. ஜிம்முக்குச் செல்லும்போது உடலைப் பிடிக்காத தளர்வான காட்டன் உடைகள், ட்ராக் சூட், கேன்வாஸ் ஷூ அணிந்து செல்ல வேண்டும். அதே சமயம் ஆடைகள் மிகவும் தொளதொளவென இருக்கவும் வேண்டாம். அது மெஷினில் உடற்பயிற்சி செய்யும் போது இடையூறாக இருக்கும்

வாக்கிங் செய்ய தொடங்கிய முதல் நாளே ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று தடாலடியாக இறங்காதீர்கள். முதலில் கால் மணி நேரம் நடந்து பழகுங்கள். இப்படி சிறிது சிறிதாக இலக்குகளை உருவாக்கும் போது உடலும் உடற்பயிற்சிக்குத் தோதாக மாறும். சிறு சிறு இலக்குகளில் நமக்குக் கிடைக்கும் வெற்றி நம்மை உற்சாகமாகச் செயல்பட வைத்து, தொடர்ந்து ஈடுபாட்டுடன் உடற்பயிற்சியில் ஈடுபட உதவும். 
Tags:    

Similar News