லைஃப்ஸ்டைல்

கால் மூட்டுக்கு வலிமை தரும் பயிற்சி

Published On 2018-01-15 03:35 GMT   |   Update On 2018-01-15 03:35 GMT
கால் மூட்டு வலி, தொடை பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
உடலில் உறுதி அடைய பல்வேறு பயிற்சிகள் உள்ளது. கால் மூட்டு வலியால் பலர் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது.

இந்த பயிற்சியை வீட்டில் தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இந்த பயிற்சி செய்ய 20 நிமிடம் இருந்தால் போதுமானது. இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் சுவற்றின் ஓரமாக தரையில் கால்களை பதித்தபடி நிற்கவும். பின்னர் காலை லேசாக அகட்டி, மூச்சை உள் இழுத்தபடி ஐந்து விநாடிகள் இருக்கவும். பிறகு லேசாக முதுகைப் பின்னால் நகர்த்தவும். இப்போது மூச்சை உள் இழுத்தபடி வலது கையை சுவற்றில் வைத்து இடது காலைப் பின்னால் மடக்கி இடது கையால் காலை பிடிக்கவும்.

மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் காலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவும். அடுத்து கால் மாற்றி இதேபோல் செய்யவும். இப்படித் தொடர்ந்து பத்து முறை செய்ய வேண்டும்.

பலன்கள் :

இந்த பயிற்சி அடிவயிற்றுப் பகுதிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உடல் உறுதியாகும். கால் மூட்டு, தொடை பகுதிகளுக்கு வலிமை தரும்.
Tags:    

Similar News