லைஃப்ஸ்டைல்

ஓடும் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகள்

Published On 2017-11-21 04:55 GMT   |   Update On 2017-11-21 04:55 GMT
இதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓடுவார்கள்.
அநேக இளைஞர்கள், இளைய சமுதாயம் காலையிலோ, மாலையிலோ பார்க்கிலோ, ரோடு ஓரங்களிலோ, பீச்சிலோ முறையான உடை, காலணியோடு ஓடுவதினைப் பார்க்கின்றோம். இதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓடுவார்கள். ஆனால் பலரும் இந்த ஓடும் உடற்பயிற்சியினை பிடித்து ஓடுவதில்லை.

காலையில் எழுந்து, தகுந்த உடை அணிந்து, வியர்க்க விறுவிறுக்க ஓடுவது பிடித்தமான செயலா என்ன? இதிலும் நாம் ஓடுவதினைப் பற்றி அநேகர் விமர்சிக்கவும் செய்வர். பலரிடம் நீங்கள் ஏன் ஓடும் உடற்பயிற்சியினை மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்வியினை கேட்ட பொழுது நான் அதிகம் கேக் சாப்பிடுவேன், ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். அதிக நொறுக்கு தீனி சாப்பிடுவேன் என்றே பதில் சொன்னார்களாம்.

இதனை ஒரு ஆய்வு கூறுகின்றது. ஆக சாப்பிடும் அதிக உணவினை சரி கட்டவே பலர் இந்த உடற்பயிற்சியினை மேற்கொள்கின்றனர் என்றாலும் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் இதனையெல்லாம் தாண்டி ஓடும் பயிற்சியினால் பல நன்மைகள் இருக்கின்றன.

* ஓடுவது ஒருவரை நல்ல சக்தி உள்ளவராக உணரச் செய்யும்.

* இவர்கள் சீராக தெளிவாக சிந்திக்கவும் செய்வார்கள்.

* கோபம், வருத்தம், அதிக உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை இவர்களிடம் இருக்காது.

* இதற்கு எந்த ‘ஜிம்’முக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘ஜிம்’ போன்ற பயிற்சி நிலையங்களில் சேரும் பொழுது உங்கள் வயது, எடை, நோய் பாதிப்பு போன்றவற்றினை அறிந்து அதற்கேற்ப பயிற்சியாளர் பயிற்சிகளை அளிக்கும் பொழுது நீங்கள் பாதுகாப்பான பயிற்சி முறையினை கடைபிடிக்கின்றீர்கள் என்ற உறுதி உங்களுக்குக் கிடைக்கும்.

2007-ம் ஆண்டு உடற்பயிற்சியினைப் பற்றி மிகப்பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் உடற்பயிற்சி மூளை செயல்பாட்டுத் திறனை அதிகப்படுத்துவதாகக் கூறப்பட்டது. குறிப்பாக முதியவர்களைத் தாக்கும் மறதி நோய் தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதே வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் சைக்கிள் ஓட்டும் பழக்கம் கொண்ட சிறுவர்கள் ஆக்கப் பூர்வமாகவும், கவனத்திறன் கூடுதல் கொண்டவர் களாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது.
Tags:    

Similar News