லைஃப்ஸ்டைல்

நடைப்பயிற்சியை மேற்கொள்வது எப்படி

Published On 2017-09-13 04:05 GMT   |   Update On 2017-09-13 04:05 GMT
உடற்பயிற்சி செய்யமுடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியை செய்யலாம். நடைப்பயிற்சி எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அனைவருக்கும் இல்லாமல் போய் விட்டது. இதிலும் உட்கார்ந்தே வேலைசெய்வபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

உடற்பயிற்சி செய்யமுடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியை செய்யலாம்.

நடைப்பயிற்சி எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அவரவர் உடல் பருமனுக்கு ஏற்ப நடக்கும் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும்.

நடந்தால் போதும் என்று அவரவர் இஷ்டப்படி நடக்கிறார்கள். இதனால் பிரச்சினைகள்தான் உருவாகின்றன. பொதுவாக நடைப்பயிற்சி செல்லும் ஒருவர் நிமிடத்திற்கு 100 அடிகள் எடுத்து வைப்பதே நல்லது.

இதுதான் மிதமான உடற்பயிற்சி. இந்த வேகத்தில் தினமும் 30 நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சியாக அமையும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது தான் மிகவும் சிறப்பானது. காலையில் செய்யமுடியாதவர்கள் வேண்டுமானால் மாலையில் செய்யலாம்.

மற்ற பயிற்சிகளை செய்ய முடியாதவர்கள் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சியை மட்டுமாவது செய்யலாம். வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
Tags:    

Similar News