லைஃப்ஸ்டைல்

வயிற்று கோளாறுகளை குணமாக்கும் வாமநௌலி

Published On 2017-09-04 04:13 GMT   |   Update On 2017-09-04 04:13 GMT
இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும்.
செய்முறை : விரிப்பில் முதலில் கால்களை சற்று விரித்து நிற்கவும். முன்பக்கம் சிறிது குனிந்து இடது தொடையின் மேல் கையை நன்கு அழுத்தினால் வயிற்றின் இடது பக்க சதைக்கூட்டங்கள் ஒதுங்கி இடது வலது புறமாக திரளும். இதைப் போலவே வலது பக்க தொடையின் மேல் கையை நன்கு அழுத்தினால் வலது பக்க சதைக்கூட்டங்கள் இடது பக்கமாக திரளும்.

இதற்கு தட்சிண நௌலி என்று பெயர். இந்த நௌலியை தொடர்ந்து இடது, வலது என்று வேகமாக செய்யும் போது அது பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த நௌலியை எத்தனை தடவை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யலாம்.

குறிப்பு: வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஹெர்னியா என்னும் அடிவயிறு சதை தள்ளும் கோளாறு உள்ளவர்கள், வயிற்றுப்புண் உடையவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய பலவீனம் உள்ளவர்கள் மற்ற எளிதான ஆசனங்கள், மூச்சுபயிற்சிகள், உணவு பழக்கங்கள் மூலம் தங்கள் உடல் நல குறைபாடுகளை சரி செய்து பின்னர் நௌலியை பழகலாம். இந்த ஆசனத்தை பதினான்கு வயதிற்கு உள்பட்ட சிறுவர்களும், கர்ப்பம் தரித்த பெண்களும் கட்டாயம் பழக கூடாது.

லன்கள்: நௌலியின் பலன் அதிசயிக்கத்தக்கது. இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும்.

வியாதிகள் என்னும் பிடியிலிருந்து உடல் விலகி விடும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாம நௌலி உறுதுணையாக இருக்கும்.
Tags:    

Similar News