பெண்கள் உலகம்

பெண்களுக்கு வயிற்று சதை குறைய ஏரோபிக்ஸ் பயிற்சி நல்லது

Published On 2017-07-17 12:21 IST   |   Update On 2017-07-17 12:21:00 IST
பெண்கள் வயிற்றில் தொங்கும் வேண்டாத சதையையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க ஏரோபிக்ஸ் என்ற உடற்பயிற்சியினை செய்து எளிதில் உடல் நலம் பெறலாம்.
பெண்களில் பலர் 30 வயது தொடுவதற்குள் வயிற்றில் ஏகப்பட்ட மடிப்புகள் விழுந்து சதைகள் தொங்கி இளமையிலேயே முதுமையானவர்கள் போல வாழ்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் தொடர்ந்த உடற்பயிற்சி இன்மைதான்.

இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து வந்தால் உறுதியான உடம்புடன் கட்டழகினையும் பெறலாம். இப்படி சதை தொங்கி மடிப்பு விழ கொழுப்பு கூடுவது தான் காரணம். இத்தகைய வேண்டாத கொழுப்புகளை எல்லாம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி கரைத்து விடும்.



இன்னும் சில பெண்கள் வயிற்றில் தொங்கும் வேண்டாத சதையையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க பெல்லிரோலர், வைபிரேட்டர் போன்ற கருவிகளில் முயற்சி செய்து பணத்தை செலவு செய்த பின்னரும் குண்டான உடம்பு குறையவில்லை என்று கூறுவார்கள். இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் என்ற உடற்பயிற்சியினை செய்து எளிதில் உடல் நலம் பெறலாம்.

பெண்கள் எடைப்பயிற்சி செய்யலாமா? செய்யக்கூடாதா? என்ற கருத்து உண்டு. பெண்கள் எடை பயிற்சியினை தவிர்ப்பது நல்லது. பெண்களின் உள் உறுப்புகளில் சில, ஆணின் உள் உறுப்புகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பால் சுரப்பிகள், கருப்பைகள், எல்லாம் ஆணிலிருந்து மாறுபட்டிருப்பதால் பெண்கள் எடைப்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

Similar News