லைஃப்ஸ்டைல்

கைகள், தோள்பட்டைகளுக்கான உடற்பயிற்சி

Published On 2017-06-12 06:53 GMT   |   Update On 2017-06-12 06:53 GMT
கைகள், தோள்பட்டை, மார்பு பகுதியை வலிமையாக்க எளிய உடற்பயிற்சி உள்ளது. இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்விரைவில் நல்ல பலனை காணலாம்.
மார்பு அளவிற்கு இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கெதிரில் தரையில் ஊன்றி, கால்களை ஒன்று சேர்த்து பின்னுக்கு நீட்டிக் கொள்ளவும். கால் விரல்களை பூமியில் படிய வைத்து தலை நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு சுவாசத்தை நெகிழ்த்தவும். அதாவது உடல் தரையில் படாமல் உள்ளங்கைகளும், கால் விரல்களும் மட்டுமே தரையில் பட வேண்டும்.

பிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் . ஆனால் தரையில் உடல் படக்கூடாது. இந்நிலையில் சுவாசத்தை உள் இழுத்துக் கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை நிமிர்த்தவும். உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் படுத்தல் கூடாது.

இதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம். சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.

சற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை, கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.
Tags:    

Similar News