லைஃப்ஸ்டைல்

காது கோளாறு உள்ளவர்களுக்கான சூன்ய முத்திரை

Published On 2017-05-26 06:40 GMT   |   Update On 2017-05-26 06:41 GMT
காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, அல்லது 45 நிமிடமாவது செய்ய வேண்டும். இந்த முத்திரை செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
செய்முறை :

விரிப்பில் அமர்ந்து கொண்டு இந்த முத்திரையை செய்ய வேண்டும். நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் :

இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.



எச்சரிக்கை :

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
Tags:    

Similar News