பெண்கள் உலகம்

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முத்திரை

Published On 2017-05-09 12:22 IST   |   Update On 2017-05-09 12:22:00 IST
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் ரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். இப்போது இந்த முத்திரையின் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை  :

சேரில் அல்லது தரையில் அமர்ந்து கொண்டு நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும், 10 நிமிடங்கள் செய்தாலே போதும்.

பயன்கள்  :

ரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கும்போது, தலைசுற்றல், படபடப்பு வரும் போது இந்த முத்திரையை செய்யலாம். வெயிலில் அலையும்போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப் படபடப்பு, அதிகமாக பி.பி உயர்ந்துவிட்டது என உணரும் சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.

Similar News