லைஃப்ஸ்டைல்

கைகளுக்கு வலிமை தரும் உத்தித பத்மாசனம்

Published On 2017-04-11 06:50 GMT   |   Update On 2017-04-11 06:50 GMT
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

செய்முறை :

விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும். உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும். இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வந்து, பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.



குறிப்பு: வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் தவிர்க்க வேண்டும்.

பயன்கள் :

1. தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன.

2. ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது.

3. குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.

4. உடல் எடை குறைகிறது.

5. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது.

Similar News