பெண்கள் உலகம்
ஞாபக சக்தியை அதிகரிக்கும் பர்வதாசனம்
பர்வதாசனத்தை செய்வது மிகவும் சுலபம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை :
விரிப்பில் கவிழ்ந்து படுக்கவும். கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும்.
உள்ளங்கை பகுதியினையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கிய படி முக்கோண வடிவத்தில் படத்தில் உள்ளபடி உயர்த்தவும்.
பின் தலையினை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்து பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலைவலி, கண் நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
பலன்கள் :
தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.