லைஃப்ஸ்டைல்

வயிறு, தொடைப்பகுதிக்கான எளிய பயிற்சி

Published On 2016-10-25 04:25 GMT   |   Update On 2016-10-25 04:25 GMT
வயிறு, தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் எளிய பயிற்சியை கீழே பார்க்கலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றுப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதை விரைவில் கரைய ஆரம்பிக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். கைகளை தலைக்கு பின்புறமாக கொண்டு சென்று முட்டி வரை மடக்கி கைகளை இணைத்து கொள்ளவும்.

வயிற்றை இறுக்கமான பிடித்துக்கொண்டு வலது காலை முட்டி வரை மேல் நோக்கு தூக்கி இடது கை முட்டியால் தொட வேண்டும். கால்களை கீழே விடும் போது வயிற்று பிடியை விட வேண்டும். இப்போது இடது காலை மடக்கக்கூடாது. (படத்தில் உள்ளபடி)

இவ்வாறு இடது காலை முட்டிவரை மேல் நோக்கி தூக்கி வலது கை முட்டியால் தொட வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு தொடுவது கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சியை நன்கு பழகிய பின்னர் எளிதாக செய்ய வரும்.

ஒரு பக்கத்திற்கு 20 செட் என இருபக்கமும் செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்த 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.  மேலும் இந்த பயிற்சி கால் தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதை குறையவும் உதவுகிறது.

Similar News