பெண்கள் உலகம்

ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தரும் முத்திரை

Published On 2016-10-18 11:49 IST   |   Update On 2016-10-18 11:49:00 IST
தலையில் நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலிக்கு இந்த முத்தியை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பலனை காணலாம்.
செய்முறை :

கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.

காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.

பலன்கள் :

நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். தலையில் நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலி சரியாகும். மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். வளர் இளம் பருவத்தில் வரும் முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்தும்.

சாந்தமான மனநிலை மற்றும் குணங்கள் பெற முடியும். வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.

காது வலி, தலைக்குள் ஏற்படும் வலி, மதமதப்பு ஆகியவை குறையும்.

Similar News