பெண்கள் உலகம்

உடலுக்கு சக்தி தரும் முகுள முத்திரை

Published On 2016-10-15 11:45 IST   |   Update On 2016-10-15 11:45:00 IST
உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
செய்முறை :

வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடிக்க வேண்டும்.

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மனசக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.

பயன்கள் :

உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இந்த முத்திரையை செய்வதன் மூலம் உடலின் எல்லா பாகங்களுக்கும் அவற்றின் இயற்கையான வலிமை பெறலாம்

Similar News