லைஃப்ஸ்டைல்

முதுகுவலிக்கு நிவாரணம் தரும் அர்த்த சக்ராசனம்

Published On 2016-10-11 06:33 GMT   |   Update On 2016-10-11 06:33 GMT
சக்கரம் போன்று பாதி நிலையில் பின்னால் வளைந்து செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது. முதுகுவலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
செய்முறை :

விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும். கைகளால் இடுப்பை பிடித்து கை கட்டை விரல்களால் முதுகை அழுத்தி பின்னோக்கி முடிந்த அளவிற்கு வளைய வேண்டும்.

ஆனால் கால் முட்டிகளை வளைக்கக் கூடாது. அப்படியே 20 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சாதாரணமாக மூச்சு விட வேண்டும். கண்கள்  திறந்திருக்க வேண்டும். அடுத்து மெதுவாக நிமிர்ந்து நிற்கவும். கைகளை இடுப்பிலிருந்து பிரித்து தளரவிட்டு சிறது ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்து முடிக்க வேண்டும்.

இதய நோய் உள்ளவர்கள் இதனை மெதுவாக செய்யவேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதை தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக் கொண்டு செய்யலாம். முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.

பயன்கள் :

ஆஸ்துமா, கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பு நீங்குகிறது..

உடம்பின் முன்புறத்தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத் தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கிறது. இது பாத ஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அந்த ஆசனத்தின் பலன்களை இது கூட்டுகிறது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.

Similar News