பெண்கள் உலகம்

இதயத்தைப் பாதுகாக்கும் 5 பயிற்சிகள்

Published On 2016-08-25 10:40 IST   |   Update On 2016-08-25 10:40:00 IST
நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், ஜாகிங் ஆகிய ஐந்து எளிய பயிற்சிகளைச் செய்தாலே போதும்... உடலும் மனமும் இதயமும் ஆரோக்கியம் பெறும்.
இதயம் குறித்த விழிப்பு உணர்வு பரவலாகியிருக்கும் காலம் இது. இதயத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? கடினமான பயிற்சிகள் ஏதும் தேவை இல்லை, நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், ஜாகிங் ஆகிய ஐந்து எளிய பயிற்சிகளைச் செய்தாலே போதும்... உடலும் மனமும் இதயமும் ஆரோக்கியம் பெறும்.

நடைப்பயிற்சி :



* இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
* உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
* உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராகத் தரும்.
* உடல் எடையைக் குறைக்கும். சீரான எடையைப் பராமரிக்க உதவும்.
* மறதி நோய் வராமல் காக்கும்.
* சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
* எலும்பு அடர்த்திக் குறைவு (ஆஸ்டியோ பொரோசிஸ்) வராமல் தடுக்கும்.
* வைட்டமின் டி அளவை உடலில் அதிகரிக்கச் செய்யும்.
* எந்த நோயாக இருந்தாலும், அதன் வீரியத்தைக் குறைக்கும்.
* சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சி.

ஜாகிங் :



* எலும்புகளை உறுதியாக்கும்.
* தசைகளை வலுவடையச் செய்யும்.
* முழுமையான இதய ஆரோக்கியம் கிடைக்கச் செய்யும். இதயத் துடிப்பை சீராக்கும்.
* உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும்.
* ஓடும்போது சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும்; உடல் புத்துணர்ச்சி அடையும்.
* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
* தேவையான ஆக்சிஜனைக் கிரகிக்க உதவும்.
* உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையை மேம்படுத்தும்.
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
* 10 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஜாகிங்கில் ஈடுபடலாம்.

குறிப்பு: மூட்டுவலி இருப்பவர்கள் ஜாகிங் செய்வதைத் தவிர்க்கவும்.

நீச்சல் :



* தொப்பையைக் கரைக்கும். அழகான, தட்டையான வயிறு கிடைக்கும்.
* மன அழுத்தத்தைப் போக்கும்.
* உடலின் அமைப்பு (Posture), சமநிலை (Balance) மற்றும் ஒத்துழைக்கும் திறனை மேம்படுத்தும்.
* உடல் வெப்பத்தை நீக்கும்.
* நாள்பட்ட நோய்களைச் சரிசெய்யும்.
* தசைகளை வலுவடையச் செய்து, உடலை உறுதியாக்கும்.
* உடல் உறுப்புகள் அனைத்தையும் ஆரோக்கியம் பெறச் செய்யும்.
* இதயம் மற்றும் நுரையீரலை வலுவடையச் செய்யும்.
* பசியின்மையை நீக்கும்.
* கொழுப்பைக் குறைத்து, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
* மூட்டு, கால் பகுதிகளை உறுதியாக்கும்.

குறிப்பு: காதில் தொற்று உள்ளவர்கள் மருத்துவர் அனுமதி பெற்றுச் செய்யலாம்.

ஏரோபிக்ஸ் :



* அதிக அளவில் கலோரி எரிக்கச் செய்யும்.
* உடல் எடையைக் குறைக்கும்.
* உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கும். காய்ச்சல், சளி, தொற்று போன்றவை வராமல் காக்கும்.
* இதயம் மற்றும் இதயத் தசைகளை வலுப்படுத்தும்.
* ரத்தத்தைச் சீராக பம்ப் செய்து, அனைத்து உறுப்புகளுக்கும் சீராகப் பாய உதவும்.
* நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
* டென்ஷன், மன உளைச்சலைச் சரியாக்கும்.
* கவலை, சோர்வு நீக்கும்.
* நீண்ட ஆயுள் கிடைக்கும்.
* மூட்டுப் பிரச்னை, முதுகு எலும்பு, டிஸ்க் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கலாம். உடல் பருமனானவர்,

குறிப்பு: உடல்பருமனானவர், ட்ரெயினரின் ஆலோசனையோடு சில பயிற்சிகளை மட்டும் தவிர்க்கலாம்.

சைக்கிளிங் :



ஏரோபிக் மற்றும் ஜாகிங் இரண்டுக்குமான பலனை சைக்கிளிங் பயிற்சி மட்டுமே தந்துவிடும்.
தசைகளை வலுவாக்கி, வலிமைமிக்க உடலாக மாற்றும்.
இதயத் துடிப்பை அதிகப்படுத்தும். இதய உறுப்புகளை வலுப்படுத்தும்.
50 சதவிகித இதய நோயாளிகள் சைக்கிளிங் பயிற்சியால் குணமடையலாம் என்கின்றன ஆய்வின் முடிவுகள்.
மனம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும்.
தோள்பட்டை - கால்கள், பாதம் - கை, உச்சி - பாதம் வரை அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எலும்புகள், மூட்டு இணைப்புகள் ஆகியவற்றை வலுவாக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

குறிப்பு: மூட்டுத் தேய்மானம், அறுவைசிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் ஆலோசனை கேட்டு, சைக்கிளிங் பயிற்சி செய்வது நல்லது.

Similar News