பெண்கள் உலகம்

ஓட்டப் பயிற்சிக்கு நிகரான கிராஸ் மவுன்டைன் கிளைம்பர்ஸ் பயிற்சி

Published On 2016-08-11 11:31 IST   |   Update On 2016-08-11 11:31:00 IST
நேரம் கிடைப்பதில்லை என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் வீட்டில் செய்து வரலாம்.
இளம் தலை முறையினருக்கு வேலை பளுவின் காரணமாக உடற்பயிற்சி செய்ய ஆசையிருந்தாலும் நேரம் கிடைப்பதில்லை. அதிலும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் வீட்டில் செய்து வரலாம். இந்த பயிற்சி நடைப்பயிற்சிக்கு நிகரான பலனைத்தரக்கூடியது. தினமும் உடற்பயிற்சி செய்தாலே எடையைக் குறைத்து, தேவையற்ற கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கைகள் மற்றும் முன் பாதங்கள் தரையில் ஊன்றியபடி உடல் தரையில் படாதவாறு பேலன்ஸ் செய்ய வேண்டும். இடது பாதத்தை வலது கைக்கு நேர்க்கோட்டில் கொண்டுவந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பிறகு வலது பாதத்தை இடது கைக்கு நேர்க்கோட்டில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 5 முதல் 8 நிமிடங்கள் செய்யலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். ஓட்டப் பயிற்சிக்கு நிகரானது. அதிக அளவில் கலோரி எரிக்கப்படும். உடலின் பின் பகுதி தசைகள் குறையும்.

Similar News