லைஃப்ஸ்டைல்

நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் ஷட்கமல முத்திரை

Published On 2016-08-06 07:43 GMT   |   Update On 2016-08-06 07:43 GMT
ஷட்கமல முத்திரையில் கணையம், சிறுநீரக புள்ளிகள் அழுத்தப்படுகின்றன. அதனால் நீரிழிவு நோய் வராது. வந்தாலும் கட்டுக்குள் இருக்கும்.
செய்முறை :

தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு இந்த முத்திரையை செய்யலாம். மோதிர விரலை மடக்கி உள்ளங்கை மத்தியில் வைக்கவும். ஆள்காட்டிவிரலை மடக்கி பெருவிரலின் அடிப்பகுதியில் வைக்கவும். இரண்டு கைகளையும் ஒன்றின் மீது ஒன்றாக மூடி வைக்கவும். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் செய்யவும்.

பயன்கள் :

வர்மக்கலை, அக்கு பிரஷர் போன்ற மாற்று முறை மருத்துவத்தில் நம் உடலில் உள்ள புள்ளிகளை அழுத்துவதன் மூலம் நோய்களைச் சரி செய்யலாம். இதன்படி நம் உள்ளங்கையில் பல உறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளன.

மிக முக்கியமான, கண், காது, கணையம், சிறுநீரகம் போன்றவை. இம்முத்திரையில் கணையம், சிறுநீரக புள்ளிகள் அழுத்தப்படுகின்றன. அதனால் நீரிழிவு நோய் வராது. வந்தாலும் கட்டுக்குள் இருக்கும். அதே போல் சிறுநீரக புள்ளியும் அழுத்தப்படுவதால், அதிக சிறுநீர் வெளியேற்றம், நீரில் சத்துக்கள் வெளியேறுதல், சிறுநீர் பாதை தொற்று போன்ற பலவற்றுக்கும் நிவாரணம் தரும்.

கண், காது, மணிக்கட்டு போன்றவை பலம் பெறுகின்றன. இதுபோல் நிறைய பலன்களும் கிடைக்கின்றன. ஒரு பட்டியலே இடலாம். அந்த அளவிற்கு அற்புதமான முத்திரை.

Similar News