பெண்கள் உலகம்

சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை

Published On 2016-07-21 11:50 IST   |   Update On 2016-07-21 11:50:00 IST
அனைத்து சுவாசப் பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது இந்த ஆதி முத்திரை.
செய்முறை :

கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். பின்னர் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றி மடக்கி (படத்தில் உள்ளபடி) பிடிக்க வேண்டும்.

விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் :

நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.

முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.

மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.

பய உணர்வு நீங்கும். நேர்மறை எண்ணங்கள், மன உறுதி, மனஅமைதி ஏற்படும்.

Similar News