பெண்கள் உலகம்

இடுப்பு கொழுப்பை குறைக்கும் வீரபத்ராசனம்

Published On 2016-06-23 07:14 IST   |   Update On 2016-06-23 07:14:00 IST
தற்போதுள்ள காலகட்டங்களில் கணினி முன் அமர்ந்து நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு இடுப்பில் கொழுப்பு சேரும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த யோகாசனா கை கொடுக்கும்.
வீர என்றால் போர்வீரன் பத்ர என்றால், நல்லவிதமான என்று பொருள். வீரனைப் போன்ற நிலையில் நின்று கொண்டு இந்த ஆசனம் செய்வதால் வீரபத்ராசனம் என்று பெயர் வந்துள்ளது.

செய்முறை :

முதலில் தடாசனத்தில் அதாவது நேராக நில்லுங்கள். சுவாசத்தை ஆழ்ந்து இழுத்து விடவும். பின்னர் இரு கால்களையும் விரித்துக் கொண்டு நிற்கவும். இப்போது வலது பாதத்தை வலது பக்கமாக பார்க்கும்படி திருப்பவும். வலது காலை இப்போது மடக்குங்கள்.

எவ்வளவு முடியுமே அவ்வளவு மடக்கி நிற்க வேண்டும். உடலையும் வலது பக்கம் திருப்பவும். கைகளை மேலே தூக்கி உள்ளங்கைகளை வணக்கம் சொல்வது போல் வைத்திருங்கள். இடது காலை வளைக்காமல் நீட்டியிருக்கவும். உடலை லேசாக வளைக்கவும். தலையும் லேசாக பின்பக்கம் வளைக்கவும்.

இந்த நிலையில் 30 நொடிகள் நிற்கவும். பின்னர் இதேபோல் இடது காலுக்கு செய்யுங்கள். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த ஆசனம் விரைவில் நல்ல பலனைக்கொடுக்கக் கூடியது.

பலன்கள் :

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு குறையும். கால்கள் வலுப்பெறும் . தோள்பட்டைகள் அகன்று பல பெறும். மார்புக் கூடு விரிவடைந்து கம்பீர தோற்றம் உண்டாகும். உடலுக்கு புத்துணர்ச்சி தரும். மனஅழுத்தத்தைப் போக்கும் குறிப்பு : கழுத்து, மூட்டு, பாத வலிகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

Similar News