பெண்கள் உலகம்

முதுகெலும்பை வலிமையாக்கும் ஷாங்காசனா

Published On 2016-06-22 09:33 IST   |   Update On 2016-06-22 09:33:00 IST
உடலை உறுதிபடுத்துவதுடன், மனப்பிரச்சனைகளையும் போக்கக்கூடிய ஆசனம் இது.
செய்முறை :

கால்களை மடக்கி, பாதங்கள் மீது அமர வேண்டும். நிமிர்ந்து இருக்க வேண்டும், கைகளைத் தொடை மீது வைத்துக்கொள்ள வேண்டும். இது வஜ்ராசன நிலை. இப்போது, கண்களை மூடி 10 விநாடிகள் ஓய்வாக இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்தபடியே கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். மூச்சை விட்டபடியே, நெற்றி மற்றும் கை தரையில் பதியும் அளவுக்கு மேல் உடலை வளைக்க வேண்டும். ஐந்து விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள் :

முதுகெலும்பு டிஸ்க் தொடர்பாக ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் தரும்.

அட்ரினல் சுரப்பிகள் சீராகச் செயல்பட உதவும்.

இடுப்புத் தசைகள், சியாடிக் நரம்பு பிரச்சனைகள், பெண் மற்றும் ஆண் இனப்பெருக்க மண்டல செயல்திறனை மேம்படுத்தும்.

மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும்.

மூளை சுறுசுறுப்படைய செய்யும். மனச்சோர்வு, தூக்கமின்மை, கவலை, சோர்வு நீங்கும்.

குறிப்பு: மூட்டு, முதுகு வலி உள்ளபோதும், மயக்கம், நடுக்கம், காய்ச்சல் சமயங்களிலும் இந்த யோகாவைத் தவிர்க்க வேண்டும்.

Similar News