பெண்கள் உலகம்

அகில உலக யோகா தினம்: சென்னையில் நாளை பிரம்மா குமாரிகளின் சிறப்பு நிகழ்ச்சி

Published On 2016-06-20 14:47 IST   |   Update On 2016-06-20 14:47:00 IST
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக அகில உலக யோகா தினம் நாளை சென்னை பிராட்வே பஸ்நிலையத்தினுள் அமைந்திருக்கும் பச்சையப்பர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
தியானம், யோகா என்பது உலகறிந்த மிகப்பழமையான மன, உடல் பயிற்சியாகும். பிரதமர் மோடி ஜூன் 21-ம் நாளை கொண்டாட மேண்டுமென கேட்டுக்கொண்டதன் பேரில் ஐ.நா. சபை அகில உலக யோகா தினமாக அறிவித்தது. அதன் பிறகு நலகும வளமும நல்கும் யோகத்தின் மீதான மக்களின் ஆர்வம் சிகரம் தொட்டுள்ளது.

இந்த ஆண்டு பிற தியான நிலையங்களுடன் பிரம்மா குமாரிகள் இயக்கமும் கலந்து கொண்டு தியானத்தின் மூலம் நல்லதொரு உலக மாற்றத்திற்கு அடிகோல வேண்டுமென அழைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உலகம் முழுவதிலுமுள்ள பிரம்மா குமாரிகளின் இராஜயோக தியான நிலையங்கள் இத்தியான நிகழ்ச்சியை மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளது.

ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம், புத்தியை பிரபஞ்சத்தின் உன்னத சக்தியாக இறை சக்தியுடன் ஆழந்த அன்புடன் இணணையச்செய்வதே இப்பயிற்சியின் அணுகுமுறையாகும்.

இராஜயோகம் என்பது உடற்பயிற்சியான ஆசனங்களை கடந்தது. அது உண்மையான நம்மை (ஆத்மாவை) பரமாத்மாவோடு இணைக்கும் மனப்பயிற்சியாகும். யோகா என்றால் தொடர்பு என்னும் பொருளாகும். ஆக இராஜயோகம் தன்னை எல்லாம் வல்ல இறைவன், பரம தந்தையுடன் இணைந்து அமைதி மற்றும் பேரானந்தத்தில் திளைக்கச் செய்கிறது.

உலகெங்கிலும் சுமார் 8500 கிளைகளின் மூலம் 137 நாடுகளில் இராஜயோக தியானத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கச்செய்து உலகம் ஓர் குடும்பம் என்று சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளை கடந்து மக்கள் பணியாற்றி வருகிறது. பிரம்மா குமாரிகள் இயக்கம்.

வருகிற ஜூன் 21-ந்தேதி(நாளை) அகில உலக தியான தினத்தை முன்னிட்டு சென்னையில் பாரிமுனையில் பிராட்வே பஸ்நிலையத்தினுள் அமைந்திருக்கும் பச்சையப்பர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 3500 பேர் கலந்து கொள்ளும் யோகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. மாலை 5 மணி முதல் 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

முதலில் ஒரு சில யோகாசனப் பயிற்சிகளும் பின்பு தியான யோகத்தின் பல்வேறு நிலைகளில் செயல் முறைப்பயிற்சியும் நடைபெறும். பொது மக்கள் கலந்து கொண்டு இதன் முழுபலனை அடையுமாறு பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கு. பீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News