பெண்கள் உலகம்

குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விருக்ஷாசனா

Published On 2016-06-16 08:58 IST   |   Update On 2016-06-16 08:58:00 IST
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விருக்ஷாசனா யோகா நிரந்தர தீர்வை தரும்.
குறைந்த ரத்த அழுத்தம் உடலுக்கு ஆபத்தைதான் தரும். ஆகவே உடனடியாக கவனிக்க வேண்டும். அவற்றை சரி செய்ய யோகாவில் ஒரு தீர்வு உண்டு. அதுதான் விருக்ஷாசனா. இது செய்வதற்கு மிக எளிது. ரத்த ஓட்டத்தை சீராக்கும். அதனை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை :


தரையில் உள்ள விரிப்பில் நேராக நில்லுங்கள். மூச்சை சீராக விட வேண்டும். கால்களை நன்றாக சம நிலைப் படுத்தி நின்றுகொள்ளுங்கள். முதலில் வலது காலை தூக்கி, இடது காலின் தொடை மீது பாதம் பதிய வைக்க வேண்டும். முனிவர் ஒற்றைக் காலில் தவம் செய்வது போல.

இப்போது கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள். உங்கள் உடல் நேராக இருக்க வேண்டும். உடல் ஆடாமல் இருக்க உங்கள் இடது காலால் நன்றாக பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள். கண்கள் நேராக பார்த்தபடி இருக்க வேண்டும். 2 நிமிடம் அவ்வாறு இருந்துவிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வாருங்கள்.

இப்போது இது போல், இடது காலுக்கும் செய்யுங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.

ஒற்றைக்காலில் நிற்கும் நேரத்தை படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள் :

இந்த யோகாவை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்துதல் அதிகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும். குறைந்த ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் குறைந்த ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

குறிப்பு :

ஒற்றை தலைவலி, தூக்கமின்மை, அதிக ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.

Similar News