பெண்கள் உலகம்

ஒவ்வொரு ஆசனத்தையும் எத்தனை முறை செய்ய வேண்டும்

Published On 2016-06-06 12:55 IST   |   Update On 2016-06-06 12:55:00 IST
யோகாசனம் செய்வதற்கு காலத்தையும், இடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும்.
யோகாசனம் செய்வதற்கு காலத்தையும், இடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும். காலை 5 1/2 மணி முதல் 7 1/2  மணி வரையிலும் (இடையில்), மதியம் 11 1/2 மணி முதல் 1 1/2 மணி வரையிலும் (இடையில்) மாலை 5 1/2 மணி முதல் 7 1/2  மணி வரை (இடையில்)  யோகாசனம் செய்தல் வேண்டும். யோகாசனம் செய்யும் இடம் காற்றோட்டமான, அமைதியான இடமாக இருத்தல் அவசியம்.

யோகாசனம் செய்யும் முறைகள்....

1) வஜிராசனம் - 3 நிமிடங்கள்
2) திரிகோணாசனம் - 3 முறை
3) பிறையாசனம் - 3 முறை
4) பாதஅஸ்தமனாசனம் - 3 முறை
5) புயங்காசனம் - 3 முறை
6) சலபாசனம் - 3 முறை
7) தனுராசனம் - 3 முறை
8) பட்சிமோத்தாசனம் - 3 முறை
9) அர்த்தமத்தியேத்திராசனம் - 1 முறை
10) பத்மாசனம் - 3 நிமிடங்கள்
11) மச்சாசனம் - 5 முறை மூச்சை உள்இழுத்து வெளியேற்ற வேண்டும் 12)யோகமுத்திரா - 3 முறை
13) சவாசனம் -  2 நிமிடங்கள்

எப்பொழுதும் இறுதியாக சவாசனம் கட்டாயம் செய்தல் வேண்டும். இவ்வளவு ஆசனங்களையும் செய்ய கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். காலையில் செய்வது மிகவும் நல்லது.

அனைத்து ஆசனங்களையும் செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரத்தை மட்டுமாவது செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Similar News