பெண்கள் உலகம்

இதயம் பலப்படுத்தி மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை

Published On 2016-06-03 11:24 IST   |   Update On 2016-06-03 11:24:00 IST
அபான வாயு முத்திரையை தினமும் ஒரு 15 நிமிடங்கள் செய்தால் மாரடைப்பு நம்மை விட்டு ஓடிவிடும்.
தற்போதுள்ள ஆண்களில் கிட்டத்தட்ட 100 பேரில் 30 பேருக்காவது இதய நோய் உள்ளது. ஆஸ்டிரியோ ஆர்த்தரைடிஸ் போன்ற மூட்டுவலி உள்ளவர்கள் கட்டாயம் இந்த முத்திரையை செய்யுங்கள். ஹார்ட் அட்டாக் கூட வராமல் தடுக்கும். மாரடைப்பை தடுக்க அபான வாயு முத்திரை உதவுகின்றது. அவ்வளவு முக்கியமான முத்திரை இது. அபான வாயு முத்திரையை தினமும் ஒரு 15 நிமிடங்கள் செய்தால் மாரடைப்பு நம்மை விட்டு ஓடிவிடும்.

மூட்டு வலி உள்ளவர்களால் மாடிப்படி ஏறுவது கடினம். மாடி ஏறுவதற்கு 10 நிமிடம் முன் இந்த முத்திரையை செய்து விட்டு மாடி ஏறுங்கள், இளவயதுக்காரர்கள் போல் குடுகுடுவென ஏறலாம்.

செய்முறை :

ஆட்காட்டி விரலை மடக்கி வைத்துக் கொள்ளுங்கள், பின்பு கட்டை விரலையும், நடு விரலையும், மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், அவ்வளவுதான், இதுதான் அபானவாயு முத்திரை. முயலுங்கள், தொடருங்கள், இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும்.

ஆட்காட்டி விரலை மடக்கி, அதன் மேல் கட்டை விரல் வருமாறு வைத்து, நடுவிரல், மோதிர விரலை, கட்டை விரல் நுனியோடு சேர்த்து அழுத்திப் பிடிக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும். இவ்வளவுதான். நோய் தீரவேண்டும் என்று செய்பவர்கள், தினமும், ஒரு வேளைக்கு 15 நிமிடம் என 3 முறை செய்தால் உடனடி பலன் நிச்சயம். இறுதியில் மறக்காமல் பிராண முத்திரை செய்து விடுங்கள்.

பிராண முத்திரை :

சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம்.
சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.

ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம். மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும்.



மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம். தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். 

Similar News