லைஃப்ஸ்டைல்

முதுகை பலப்படுத்தும் வெர்டிகல் க்ரஞ்ச் பயிற்சி

Published On 2016-05-30 06:15 GMT   |   Update On 2016-05-30 06:15 GMT
முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.
இப்போதுள்ள காலகட்டத்தில் நிறைய பேர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக சொல்லப்படுவது அதிக பருமன், உடற்பயிற்சி இல்லாமை.

முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 1 மாதத்தில் உங்கள் முதுகு வலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்..

வெர்டிகல் க்ரஞ்ச்

முதலில் தரையில் நேராக படுத்து கொண்டு இரண்டு கால்களையும் 90 டிகிரிக்கு உயர்த்தவும். இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும். இந்த நிலையில் உடலை உயர்த்தி கால் விரல்களை தொட முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது. நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்…. கால் நரம்புகளுக்கு மற்றும் இடுப்பு எலும்புகளுக்கு நல்ல வலிமை கிடைக்கும். வயிற்றுத் தசைகள் உறுதியடையும். மொத்த உடலுக்கும் இந்த பயிற்சியால் எனர்ஜி கிடைக்கும்.

Similar News