பெண்கள் உலகம்

உடல் ஆரோக்கியம் தரும் பைரவ - பைரவி முத்திரை

Published On 2016-05-28 10:58 IST   |   Update On 2016-05-28 10:58:00 IST
தந்திர முறையில் முக்கியமானதாகக் கருதப்படும் பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கலவி முறை.
தந்திர முறையில் முக்கியமானதாகக் கருதப்படும் பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கலவி முறை. மொத்தம் 112 உத்திகளில் கலவியில் இன்பம் காணவும், அதைக்கடந்த ஞான நிலையை அடையவும் கூறப்பட்டுள்ளது.

கலவிக்கு பயன் அளிக்கவும், உடல் ஆரோக்கியம் தரவும் இம்முத்திரை பயன்படுகிறது. ஸ்வாதிஷ்டான சக்கரத்தை தூண்ட வல்லது இது. தவிர நீரிழிவு நோயால் ஏற்படும் அதிக பசி, தாகம் போன்றவை குறையவும், சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம் நன்கு செயல்படவும் இம்முத்திரை பயன்படுகிறது.

வலது கையை இடது கையின் மேல் அடிவயிற்றுக்கு நேராக வைத்துக்கொள்வது. இது சிவ அம்சமாகவும் இது பைரவ முத்திரை.

இடது கையை வலது கையின் மேல் வைப்பது சக்தி அம்சமாகவும். இது பைரவி முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது.

இரண்டிற்கும் பலன் ஒன்றே.

இந்த முத்திரையை நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்யலாம். ஆனால் காலை நேரத்தில் செய்தால் நல்ல பலன்களை விரைவில் அடையலாம்.

Similar News