பெண்கள் உலகம்

உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் அருந்தலாமா?

Published On 2016-05-26 10:27 IST   |   Update On 2016-05-26 10:27:00 IST
முடிந்த அளவு திறந்தவெளியில் காற்றோட்டமாக உடற்பயிற்சி செய்தல் நன்மை தரும்.
1. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். உங்கள் பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உடலில் சக்தி வேண்டும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால், சக்தியின்மையால் தலைச்சுற்றல் வரும். எனவே, பயிற்சி தொடங்கும் முன் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, பழங்கள் அளவோடு சாப்பிட்ட பின் செய்தால், உடல் சோர்வடையாது, உடல் வலுப்பெறும்.

2. தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

3. பயிற்சியைத் தொடங்கம் முன் உடல் உறுப்புகளை சிறிதுநேரம் அசையுங்கள் (வாம் அப் செய்யுங்கள்). இதனால் பயிற்சி எளிதாகும்.

4. உடல் எடையை உடனே குறைக்கக் கூடாது. அதிக எடை உள்ளவர்கள் மாதம் 5 கிலோவுக்குமேல் குறைக்கக் கூடாது. மெல்லமெல்ல குறைப்பதுதான் சிறப்பு.

5. உடற்பயிற்சியை முறைப்படி அறிந்து செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு உடல் தகுதியாய் உள்ளதா என்று அறிந்து செய்யுங்கள்.

6. பயிற்சியின்போது தண்ணீர் அறவே குடிக்காமல் இருக்கக் கூடாது. நாக்கு உலரும்போது ஒரு வாய் தண்ணீர் பருக வேண்டும். பயிற்சி முடிந்து 15 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.

முடிந்த அளவு திறந்தவெளியில் காற்றோட்டமாக உடற்பயிற்சி செய்தல் நன்மை தரும். வயல், தோட்டம் இருப்பின் அங்கு உழைப்பது மிகச் சிறந்தது. ஓடுதல், நீந்துதல், நடத்தல் போன்றவை மிகச் சிறந்தவை.

வாம் அப் அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும்.

Similar News