பெண்கள் உலகம்

மதிய வேளையில் யோகாசனம் செயயலாமா?

Published On 2016-05-25 09:54 IST   |   Update On 2016-05-25 09:54:00 IST
யோகாவில் எடைக் குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும்.
யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில் பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். மனமும் உடலும் இணைவதுதான் யோகா.

மற்ற பயிற்சிகளில் உடல் மிக விரைவாக இளைக்கும். ஆனால், பயிற்சியை நிறுத்தினால் முன்பைவிட அதிக எடை வர வாய்ப்பு உண்டு. யோகாவில் எடைக் குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும். இடையில் யோகாவை நிறுத்தினாலும் எடை ஏறாது.

இயற்கை நமக்கு 24 மணி நேரம் கொடுக்கிறது. நேரப் பகிர்வு அவசியம். காலையில் எழுந்ததும் யோகா செய்வது மிக நல்லது. இதனால் உடல், மனம், புத்துணர்வு அடைவதோடு, சுத்தமான காற்றும் கிடைக்கும்.

20 நிமிட யோகா, 16 மணி நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்கும். 11 மணிக்கு வேலைகளை முடித்துவிட்டு யோகா செய்யலாம். ஆனால், 8.30-க்கு காலை உணவை முடித்திருக்க வேண்டும். மாலையும் யோகா செய்வது நல்லது தான். ஆனால் மதிய வேளையில் யோகா பயிற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் அந்த நேரத்தில் செய்யும் யோகா முழு பலனையும் தராது.

Similar News