பெண்கள் உலகம்

தைராய்டு பிரச்சினையை தீர்க்கும் சூர்ய முத்திரை

Published On 2016-05-18 07:37 IST   |   Update On 2016-05-18 07:37:00 IST
இது பிருத்துவி "சாமக்" அல்லது சூரிய "வர்தக்"முத்திரை அதாவது பிருத்துவியை(மண்\பூமி) குறைக்கும் சூரிய அதாவது வெப்பத்தை அதிகரிக்கும் முத்திரை ஆகும்
செய்முறை:

மோதிர விரலை மடக்கி அதை பெருவிரலின் அடியை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். பெரு விரலால் மெதுவாக அழுத்திக்கொண்டிருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

இது பிருத்துவி "சாமக்" அல்லது சூரிய "வர்தக்"முத்திரை அதாவது பிருத்துவியை(மண்\பூமி) குறைக்கும் சூரிய அதாவது வெப்பத்தை அதிகரிக்கும் முத்திரை ஆகும். அதனால் பித்தம் அதிகம் உள்ளவர்கள் இதை குறைவாக அதாவது குறைவான நேரம் செய்யவேண்டும். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். பித்தமும் இருக்கு உடல் குண்டாகவும் இருக்கு என்றால் குறைவான நேரம் செய்யுங்கள்.

தைராய்டு சுரப்பியை சரிசெய்ய உதவும். உடம்பில் உள்ள கொழுப்பு, இரத்தக்கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகியவற்றை குறைப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. செரிமானம் நன்றாக நடக்க உதவுகிறது. மனக்கலக்கத்தை குறைக்க உதவுகிறது.

தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

Similar News