பெண்கள் உலகம்

தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா

Published On 2016-04-28 11:37 IST   |   Update On 2016-04-28 11:37:00 IST
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது.
செய்யும் முறை :

முதலில் விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொட வேண்டும்.

இப்படி இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்த பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழ வேண்டும்.

இப்படி தினமும் 5 முதல் 7 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை பின்புறம் கட்டியவாறு குனித்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

ஆரம்பகாலத்தில் முன்னால் குனிந்து தரையை தொடுவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் அதற்காக கவலைப்படவேண்டியதில்லை. தொடந்து செய்து வந்தால் தரையை தொட முடியும்.

பயன்கள் :


நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவது தடுக்கப்படும்.

யோக முத்ரா நிலையின் போது இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் நன்றாக அழுந்துவதால், நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும்.
உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமைப் பெறும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

யோக முத்ரா நிலையை தினமும் தவறாமல் செய்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி பறந்தோடிவிடும்.

இந்த யோகா நிலையின் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.

Similar News