பெண்கள் உலகம்
10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் பாடம் எடுக்கும் காட்சிகள் யூ-டியூப்பிலும் பதிவிடப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியாக பாடம் நடத்தப்படுகிறது. அதேபோல அரசு பள்ளிகள் சார்பிலும் ஆன்-லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனி செயலிகளும் (ஆப்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு 10-ம் வகுப்பில் சேர இருக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழி பயிற்சி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களும் (ஸ்மார்ட்போன்) வழங்கப்பட்டன.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) உத்தரவின் பேரில் மாநகராட்சி கல்வித்துறை செயல்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக தனி செயலி மூலம் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டது. இதற்காக ஜூன் மாதத்துக்காக தனி அட்டவணையும் தயார் செய்யப்பட்டது.
அதன்படி காலை 9.30 மணி முதல் காலை 10.15 மணி வரை ஒரு பிரிவாகவும், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மற்றொரு பிரிவாகவும் அட்டவணை தயார் செய்யப்பட்டு, தினமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அட்டவணைப்படி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த ஆசிரியர்களே பாடம் நடத்தி வருகின்றன. மாணவ-மாணவிகளும் ஆன்-லைன் வழியாக ஆர்வமுடன் படித்து பயிற்சி எடுப்பதுடன், பாடம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மாநகராட்சி கல்வித்துறை கையாண்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அது GCC Edu-c-at-i-on என்ற யூ-டியூப் வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த காட்சியை எப்போது வேண்டுமானாலும் மாணவ-மாணவிகளும் பார்த்து பயனடையலாம்.
இதுகுறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாணவர்கள் நலனுக்காக சிறந்த ஆசிரியர் குழு மூலம் தனியறையில் பாடம் நடத்தப்பட்டு, அக்காட்சிகள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதேபோல 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு வழங்கியிருக்கும் விலையில்லா ‘லேப்டாப்‘ உதவியுடன் ஆன்-லைன் வழியாக கற்பித்தல் பணி நடந்து வருகிறது‘, என்றனர்.
இதுகுறித்து சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சசிகலா, மீனலோஷினி ஆகியோர் கூறுகையில், “ஆன்-லைன் வழியாக எங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன்மூலம் எங்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும். எங்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கி அதன்வழியாக எங்கள் ஆசிரியர்களையே எங்களுக்கு பாடம் நடத்த செய்ததற்காக மாநகராட்சிக்கு நன்றி. இது அருமையான திட்டம்“, என்றனர்.