லைஃப்ஸ்டைல்
ஐந்து வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை

ஐந்து வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை

Published On 2021-02-27 04:29 GMT   |   Update On 2021-02-27 04:29 GMT
உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது.
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக யுனிசெப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலக அளவில் குழந்தைகளின் நிலை’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 2018-ம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8.8 லட்சம் பேர் இறந்திருப்பதாகவும், இந்தியாதான் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1000 பேரில் 37 பேர் இறப்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், ரத்தசோகை உள்பட பிற சுகாதார பிரச்சினைகளை மையப்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைபடுகிறது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வைட்டமின்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாவதும், பசியால் வாடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நகர்பகுதியில் 8 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 5 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News