லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த செல்போன் செயலிகள் தான் காரணம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த செல்போன் செயலிகள் தான் காரணம்

Published On 2021-02-26 04:23 GMT   |   Update On 2021-02-26 04:23 GMT
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள் குறித்து சைபர் புலனாய்வு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ‘சைபர்வெளியில் குழந்தைகளை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில் டோரண்டோவில் உள்ள சைபர் புலனாய்வுப்பிரிவு தலைவர் கெயித் எலியட் உரையாற்றினார். அப்போது அவர் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள் குறித்து பட்டியலிட்டார்.

இதில் முதலாவதாக ‘ஐ.எம்.வி.யு.’ என்ற செயலியை அவர் சுட்டிக்காட்டினார். 3டி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த செயலி பாலியல் வக்கிர குணம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதைப்போல ‘விஸ்பர்’ என்ற செயலி இளம்பருவத்தினர், பதின்ம வயதினர் தங்கள் ரகசியங்களை பகிரும் தளமாக உள்ளதாகவும், இதைப்போல ‘கிக்ஸ் ஆப்’ எனப்படும் தகவல் அனுப்பும் செயலி, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்பப்படுத்தும் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதாகவும் எச்சரித்தார்.

இதைத்தவிர ‘திண்டர் டேட்டிங் செயலி’, ‘ஓகேகியுபிட’, ‘சாட்ஸ்பின்’ ஆகிய செல்போன் செயலிகளால் குழந்தைகளுக்கு ஆபத்து நேருவதாகவும், எனவே இவற்றை குழந்தைகள் பயன்படுத்தாமல் இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கெயித் எலியட் வலியுறுத்தினார்.
Tags:    

Similar News