பெண்கள் உலகம்
சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்

இன்று சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்

Published On 2021-02-15 08:56 IST   |   Update On 2021-02-15 08:56:00 IST
சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை, கவனிப்பு மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 3 லட்சும் குழந்தைகள் பற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. லுகேமியா எனப்படும் ரத்தப்புற்றுநோய் தான் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்தால் குணப்படுத்தலாம். வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் வருத்தப்பட வேண்டிய உண்மை என்னவென்றால் வறுமை, சமுதாய ஏற்றத்தாழ்வுகள்  போதிய சிகிச்சையின்மை போன்ற காரணங்களால் பல குழந்தைகள் இதிலிருந்து மீள்வதில்லை என்பது தான் அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த நிலையை மாற்றுவற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

நாம் வசிக்கும் பகுதிகளிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்க நேரிடலாம். அத்தகைய குழந்தைகளை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நம்மால் முடிந்த ஆதரவினை அளிக்க முன்வர வேண்டும்.

Similar News