லைஃப்ஸ்டைல்
குழந்தை சீக்கிரம் நடக்க வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க...

குழந்தை சீக்கிரம் நடக்க வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க...

Published On 2021-02-01 08:27 GMT   |   Update On 2021-02-01 08:27 GMT
குழந்தையை சீக்கிரம் நடக்க வைப்பதற்கு சுலபமான முறையில் என்ன வழிகள் உள்ளது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
குழந்தைகள் பிறந்து 8 மாதம் ஆன பிறகு 8 அடி வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவது வழக்கம். ஆனாலும் சில குழந்தைகள் 8 மாதம் ஆன பிறகும் நிற்கவே மிகவும் சிரமப்படுவார்கள். தங்கள் குழந்தை 8 மாதம் ஆன பிறகும் நடக்காமல் இருப்பதை பார்த்து தாய்மார்கள் பலரும் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். சரி வாங்க இப்போது 8 மாதம் ஆன பிறகும் நடக்காமல் இருக்கும் குழந்தையை சுலபமாக எப்படி நடக்க வைக்கலாம் என்பதை பற்றிய சில டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

குழந்தை எந்த வித கஷ்டமும் இல்லாமல் சீக்கிரம் நடக்க இரவு தூங்கும் முன் பாத்திரத்தில் புழுங்கல் அரிசியை எடுத்து அதிகமாக தண்ணீர் ஊற்றி அரிசியை ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த அரிசி தண்ணீரை மறுநாள் வடிகட்டி குழந்தையை அந்த நீரில் குளிப்பாட்ட வேண்டும். ஊறவைத்த அரிசி தண்ணீரில் மட்டும் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும். குழந்தையை குளிப்பாட்ட தண்ணீர் பற்றவில்லை என்பதற்காக வேறு எந்த நீரிலும் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

சாதாரண நீரில் குழந்தையை நன்றாக குளிப்பாட்டிய பிறகு ஊறவைத்த அரிசி தண்ணீரை குழந்தையின் கால், முதுகு, இடுப்பு பகுதிகளில் நன்றாக ஊற்றிவிட்டு குளிப்பாட்டிவிட வேண்டும். குழந்தையை எப்போதும் குளிப்பாட்ட வைக்கும் நீரின் வெப்பத்தை விட இந்த அரிசி ஊறவைத்த நீரின் வெப்பத்தன்மை அதிகமாக இருக்க வேண்டும். இந்த அரிசி ஊறவைத்த நீரில் குழந்தையை குளிப்பாட்டுவதால் குழந்தையின் முதுகெலும்பு, தொடையெலும்பு, மூட்டு பகுதிகள் குழந்தைக்கு மிகவும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

காலையில் குழந்தையை குளிப்பாட்டிய பிறகு பாத்திரத்தில் அரிசியை ஊறவைத்து கொள்ளவும். மாலை 4 மணி அளவில் ஊறவைத்த அரிசியை நன்றாக வடிகட்டிய பின் மிதமான அளவிற்கு வடிகட்டிய நீரை ஹீட் செய்து குழந்தையின் இடுப்பிற்கு கீழ் நன்றாக ஊற்றிவிட வேண்டும். இது போன்று 2 முறை குழந்தைக்கு செய்துவிட வேண்டும்.

குழந்தையை தினமும் நிற்க வைத்து பழக்கி விட வேண்டும். அதிக நேரமும் குழந்தை நின்றால் வலி ஏற்பட்டுவிடும். இதனால் குழந்தைகள் அழ தொடங்கிவிடுவார்கள். அப்போது நிற்கவைப்பதை தவிர்த்துவிட்டு சிறிதுநேரம் பிறகு நிற்க வைத்து பழக்குங்கள்.

இந்த அரிசி ஊறவைத்த தண்ணீரில் குழந்தையின் முதுகு பகுதி, இடுப்பு பகுதிகளில் தினமும் ஊற்றி குளிப்பாட்டி வந்தால் நடக்க பழகாமல் இருக்கும் எந்த குழந்தையும் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அரிசி ஊறவைத்த தண்ணீரை பிறந்த குழந்தை முதல் பயன்படுத்தி வரலாம்.
Tags:    

Similar News