லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது இதையெல்லாம் மறக்காதீங்க...

குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது இதையெல்லாம் மறக்காதீங்க...

Published On 2021-01-28 03:30 GMT   |   Update On 2021-01-28 03:30 GMT
குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் போது அம்மாக்கள் ஒரு சிக்கலை பொதுவாகவே சந்திப்பார்கள். அவை என்னவென்றும் எப்படி புட்டிப்பால் கொடுக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் சிறந்தது என்றாலும் வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை உண்டாகிறது. அல்லது தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. அப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு பாட்டில் பால் கொடுப்பது வழக்கம். அதே போன்று தாய்ப்பால் கொடுத்தாலும் ஆறுமாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு இணை உணவு கொடுத்தாலும் கூட தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும். அதனால் குழந்தைக்கு மாற்றுப்பாலும் பழகுவார்கள். அப்போதுதான் பாட்டில் பழக்கத்தை ஏற்படுத்துவோம்.

குழந்தைக்கு பாட்டில் பழகும் போது முதலில் குழந்தை பாட்டில் பாலை குடிக்க திணறுவார்கள்.அம்மாவின் மார்பு காம்புகளில் உறிஞ்சு குடித்த குழந்தைக்கு திடீரென்று பாட்டில் பால் சிரமமாக இருக்கும். பாட்டில் பழகுவதற்கு சில வாரங்கள் வரை ஆகலாம். எனினும் குழந்தைக்கு பாட்டில் பால் பழகும் போது இதையெல்லாம் மனதில் வையுங்கள்.

குழந்தைக்கு பால் புகட்டும் போது உங்கள் முழங்கையை கைகளில் மடித்து குழந்தையின் தலையை உங்கள் கை மேல் வைத்து கையை குழந்தையை சுற்றி இறுக்கி பாட்டிலை பிடித்து கொள்ளுங்கள். குழந்தையின் தலை நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.முதுகு வளைந்த நிலையில் இருக்க கூடாது. எக்காரணம் கொண்டும் குழந்தையை படுத்த நிலையில் வைத்து பால் புகட்ட கூடாது.

குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது அம்மாக்களும் நேராக உட்கார்ந்துகொள்ள வேண்டும். குழந்தையை முழங்கால்கள், வயிற்றிலும் கோணலில்லாமல் குழந்தையை சீராக வைத்திருக்க வேண்டும். தாய்ப்பால் போன்று அம்மாக்கள் குழந்தையின் முகத்தை ஒட்டி இருக்க வேண்டும். குழந்தையின் பால் பாட்டில் நிப்பிள் முழுவதும் குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தை பாட்டில் பாலை உறிஞ்சும் போது குழந்தையின் வாய் வழியே காற்று சென்றுவிட வாய்ப்புண்டு.

குழந்தை சற்றூ வளர்ந்ததும் குழந்தையின் தலையை தட்டையாக வைக்காமல் சற்று உயரமான தலையணையில் படுக்க வைத்து கொடுக்கவும். பாட்டிலில் பால் புகட்டுவதால் அதிக கவனம் தேவை. பாட்டிலில் பால் கொடுத்தால் தான் என்றில்லை. குழந்தை பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போதும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் போது அம்மாக்கள் ஒரு சிக்கலை பொதுவாகவே சந்திப்பார்கள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பார்கள். குறும்பு செய்வார்கள். சில நேரம் நாக்கை நீட்டியபடி அம்மாவின் முகத்தை பார்த்துகொண்டிருப்பது,கைகளை வாய்க்குள் வைத்து விளையாடுவது, பசியின்மையை கொண்டிருப்பது, விரல்களை வாயில் வைத்திருப்பது இவற்றுக்கு இடையே தான் அவர்கள் பால் குடிப்பார்கள். ஆனால் பால் பாட்டில் குடிக்கும் போது அவர்கள் உறிஞ்சுவிட்டாலே பால் வரத்தொடங்கி விடும்.

அதனால் குழந்தைக்கு அடிக்கடி பால் புகட்ட வேண்டியிருக்காது. ஆனால் தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை அதிகமாக பால் குடித்தது. ஆனால் பாட்டில் பாலில் குழந்தை பால் அதிகம் கொடுப்பதில்லை என்று அம்மாக்கள் கவலைகொள்வார்கள். இதனால் குழந்தையின் வாயில் பால் பாட்டிலை வலுக்கட்டாயமாக புகட்டுவார்கள். ஆனால் பாட்டில் பால் கொடுக்கும் போது குழந்தைக்கு தொடர்ந்து கொடுக்காமல் இடைவெளிவிட்டு கொடுக்க வேண்டும். குழந்தை பாட்டிலில் பால் உறிஞ்சுவதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தாலும் தண்ணீர் கொடுத்தாலும் வேகமாகவோ மெதுவாகவோ இல்லாமல் சீராக வெளிவருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தை ஒரே மூச்சில் பால் குடிக்க வேண்டும் என்று நினைக்காமல் சில நிமிடங்கள் அல்லது குழந்தை 15 முறை விழுங்கிய உடன் இடைவெளி விட வேண்டும். இது குழந்தைக்கு உடல்பருமனை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு வயிறு நிறைவது தெரியாமல் அதிகமாக கொடுத்துவிட வாய்ப்புண்டு.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். பாலை மணிக்கட்டில் சில துளி விட்டு பிறகு சரியான வெப்பத்தில் கொடுக்கலாம். குழந்தை வளர வளர ஈறுகள், பற்கள் வளர்வதால் குழந்தை நிப்பிள் கடிப்பார்கள். அதனால் நிப்பிள் அதிகமாக விரிசலை சந்திக்க கூடும். அதையும் அடிக்கடி கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இறுதியாக பாட்டில்களை பயன்படுத்தும் போது சரியான பாட்டிகளை தேர்வு செய்யுங்கள். தரமான பாட்டில்களாக பயன்படுத்துவது அவசியம். பாட்டில்களை சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம். பாட்டில்கள், வளையம், நிப்பிள் அனைத்தையும் தனித்தனியாக கழட்டி சுத்தம் செய்யவும். தினமும் கொதிநீரில் பாட்டிலை போட்டு எடுக்கவும்.பாட்டிலை கழுவி துடைத்து வெயிலில் உலர வைத்து எடுக்கவும். பாட்டில் வாங்கும் போது ஏதும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறவும் தயங்க வேண்டாம்.
Tags:    

Similar News