பெண்கள் உலகம்
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க...

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க...

Published On 2021-01-25 08:51 IST   |   Update On 2021-01-25 08:51:00 IST
இந்த வகை உணவுகளை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தவிர்ப்பது நன்மை அளிக்கும். ஏனெனில் இது நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்பு உள்ளது.
குளிர்காலத்தில் நோய்களின் வரத்து அதிகம். இதனால் நம் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு அந்த சமயங்களில் சரியான உணவை அளிப்பது அவசியம். குளிர்காலத்தில் பொதுவாக குழந்தைகள் காய்ச்சல், நிமோனியா, கடுமையான காது தொற்று, ஆஸ்துமா மற்றும் தோல் அழற்சி இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதையெல்லாம் தவிர்க்க குழந்தைகளுக்கு போதுமான தூக்கத்தை அளிப்பதும், முழு தானிய உணவுகளை கொடுப்பது அவசியம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் குளிர்காலத்தில் கொடுக்கப்படும் சில உணவுகள் அவர்களுக்கு சளி, இருமலை உண்டாக்கலாம். எனவே அந்த வகை உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். எனவே குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகளை அறிந்து கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் எண்ணெய் உணவுகளை உட்கொள்வது நல்லதல்ல. எனவே விலங்குகளின் கொழுப்பில் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக வெஜிடபிள் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். உங்க குழந்தைக்கு சீரணிக்கவும் ஏதுவாக இருக்கும்.

குளிர்காலத்தில் எளிய சர்க்கரை உணவுகள் மிகவும் மோசமானவை. உடலில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகரிப்பது நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் குறைவை ஏற்படுத்தும்.இதனால் அதிகப்படியான சர்க்கரை உங்கள் குழந்தைகளின் உடல்களை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு உள்ளாக்கும். குளிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சோடாக்கள், குளிர் பானங்கள், மிட்டாய்கள், சாக்லேட், கேலாக்ஸ், மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டாம்.

இறைச்சிகள் மற்றும் முட்டைகளில் சளி உற்பத்தியை ஊக்குவிக்கும் நிறைய புரதங்கள் உள்ளன, இது குளிர்காலத்தில் உங்கள் குழந்தையின் தொண்டைக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் முட்டைகள் மிக மோசமானவை. எனவே அதற்கு பதிலாக மீன் மற்றும் கரிம இறைச்சியை தேர்ந்தெடுங்கள்.

பால் பொருட்களில் உள்ள விலங்கு புரதம் சளியை தடிமனாக்கும். இது விழுங்குவதை கடினமாக்குகிறது. எனவே, குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு சீஸ், கிரீம், கிரீம் சார்ந்த சூப்கள் மற்றும் கிரீம் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அவர்களுக்கு சளி பிடித்த சமயங்களில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Similar News