லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு கொசு கடித்து சருமம் வீக்கமா இருக்கா அப்ப இந்த வைத்தியம் செய்யுங்க

குழந்தைக்கு கொசு கடித்து சருமம் வீக்கமா இருக்கா அப்ப இந்த வைத்தியம் செய்யுங்க

Published On 2021-01-20 04:29 GMT   |   Update On 2021-01-20 04:29 GMT
குழந்தைகளை கொசு கடித்தால் மென்மையான சருமம் வீக்கத்தையும், அரிப்பையும் அதிகமாக சந்திக்கும். இதை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை அம்மாக்கள் பயன்படுத்தலாம்.
பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளை கொசு கடிக்கும் போது ஒவ்வாமை அல்லது தொற்றுகளுக்கு ஆட்படுகிறார்கள். குழந்தைக்கு கொசு கடிக்கும் போது சரும வீக்கம் இரண்டு நாட்கள் வரை இருக்க கூடும். இளஞ்சிவப்பு நிறத்தில் சருமம் தடித்திருக்கும். இதை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை அம்மாக்கள் பயன்படுத்தலாம். எனினும் தீவிரம் அதிகமாக இருந்தால் கொசுக்களால் பரவும் நோயை தடுக்க மருத்துவ உதவி தேவைப்படலாம்.

குழந்தைகளுக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த நிலையில் இவை ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். இது ஒவ்வாமைக்கு எதிர்வினையாக செயல்படுவதோடு இது சருமத்தில் அரிப்பையும் போக்கும். ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை கொசு கடித்து வீக்கமான சருமத்தில் ஒற்றி எடுக்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் போதும்.

க்ரீன் டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தின் வீக்கத்தை வேகமாக குறைக்கும். க்ரீன் டீ பேக் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள். அவை இலேசாக குளிர்ந்து போகும் போதே எடுத்து குழந்தைக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தினமும் 3 அல்லது நான்கு முறை வரை இப்படி செய்தால் போதுமானது.

அமிலத்தன்மை கொண்ட வினிகர் நச்சுத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது, இது கொசுக்கடி போன்று தேனிக்கள் போன்ற பூச்சிகளீருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது. வினிகர் அமிலத்தன்மை நிறைந்தது என்பதால் அதை சம அளவு நீரில் கலந்து சுத்தமான பருத்தி துணியால் துடைத்து எடுக்கவும். இரண்டு வேளை தடவினால் போதுமானது.

எலுமிச்சையில் தயாரிக்கப்படும் இந்த எலுமிச்சை தைலம் இயற்கை ஆண்டிஹிஸ்டமைன் என்று சொல்லலாம். இது சரும அரிப்பை நீக்க உதவுகிறது. எலுமிச்சை தைலம் இல்லையென்றால் எலுமிச்சை இலையை கசக்கி அதன் சாறைநீரில் கலந்து சருமத்தின் மீது நேரடியாக பூசவும். சருமத்துக்கு ஊறுவிளைவிக்காது என்றாலும் மென்மையான சருமம் என்பதால் நீங்கள் குழந்தையின் குளியல் தொட்டியில் ஒரு மூடி விட்டு சில நிமிடங்கள் கழித்து அந்த நீரில் குழந்தையை குளிப்பாட்டலாம்.

​டீ ட்ரி ஆயிலில்  உள்ள எண்ணெய்கள் ரசாயனங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்வதால் இது கிருமிகளை வெளியேற்றுகிறது. இது சரும வீக்கத்தை குறைக்க செய்கிறது. இதன் வாடைக்கு கொசுக்கள் அருகில் வராது என்பதால் கொசு அதிகமாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் முன்கூட்டியே குழந்தைக்கு இதை தடவி விடுவது நல்லது.

Tags:    

Similar News