லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி?

குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி?

Published On 2020-12-01 03:13 GMT   |   Update On 2020-12-01 03:13 GMT
குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.
செவித்திறன்தான், குழந்தைகளின் பேச்சுத்திறனுக்கும் மொழித்திறனுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அதன்படி செவித்திறனற்ற அல்லது செவித்திறன் பாதித்த குழந்தைகள் மொழித் திறன் மற்றும் பேச்சுத்திறனில் பின்தங்குகிறார்கள்.  எவ்வளவு சிறுவயதில் செவித்திறன் பாதிப்பு கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை மேற்கொண்டு குழந்தைகளின் வளர்ச்சியைச் சீராக்கலாம். கை, கால் பாதிப்புகளை சுலபமாகக் கண்டறிந்துவிடலாம். ஆனால் செவித்திறன் குறைபாட்டை பெரும்பாலான பெற்றோர் கண்டறிய  தவறுகின்றன.

குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன் முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது‌. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர். 

குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டிருந்தால் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் பேச்சும் மொழியும் குழந்தையின் மூளையைச் சென்றடையாது. ஆனால், மூன்று வயதான நிலையில், தங்கள் குழந்தை பேசவில்லை என்றவுடன் பெற்றோர் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவார்கள். 

இவை அனைத்தையும் கடந்தே சில பெற்றோர் செவித்திறன் சார்ந்த சிகிச்சைக்காகச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் பலரும் காலங்கள் கடந்தே செல்கின்றனர். இதனால் அந்தக் குழந்தையின் மொழித்திறன் மற்றும் பேச்சுத்திறன் வளர்ச்சியில் மற்ற குழந்தைகளைவிடப் பின்தங்கி நிற்க நேரும். இதனால் பள்ளியில் சேர்வதிலும் சிக்கலை உண்டாக்கும்.

கருவறையில் 20-வது வாரத்தில் இருந்தே குழந்தை கேட்கும் திறனைப் பெற்று விடுகிறது. உள்காதின்‌ செவித்திறன் சார்ந்த முக்கிய உறுப்பான காக்ளியா (Cochlea) அப்போது முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது. எனவே, பிறப்பதற்கு பல நாள்கள் முன்பிருந்தே குழந்தை, கேட்கத் தொடங்கி விடுகிறது.

செவித்திறன் சார்ந்த வளர்ச்சிப் படிநிலை:

குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.

* பொதுவாக, முதல் மூன்று மாதத்தில் 50-ல் இருந்து 60 டெசிபல் சத்தம் கேட்டு குழந்தைகள் அனிச்சையான செயலை வெளிப்படுத்துவர். அதாவது திடீர் சத்தம் கேட்டு கண்களைச் சுருக்குவது, சிமிட்டுவது அல்லது தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுவது, அழுவது என குழந்தைகளிடம் சில இயல்பான நடவடிக்கைகளைக் காண முடியும்.

* நான்கு முதல் ஒன்பது மாதங்களில் சத்தம் கேட்கும் பக்கம் குழந்தை தங்கள் தலையைத் திருப்ப முயற்சி செய்யும். நான்காவது மாதத்தில் 40-ல் இருந்து 50 டெஸிபல் சத்தத்துக்கு தலையைத் திருப்பிய குழந்தை, ஒன்பதாவது மாதத்தில், 25-35 டெசிபல் சத்தத்துக்கே தலையைத் திருப்பும்.
* 10-வது மாதம்/ஒரு வயதில் - சரியாக சத்தம் வரும் இடத்தைக் கண்டுபிடித்து அந்தப் பக்கமாகத் தலையைத் திருப்புவார்கள். மிகச்சிறிய சத்தத்தையும் எளிதில் கண்டறிவார்கள்.
Tags:    

Similar News