லைஃப்ஸ்டைல்
சம்மர் கேம்ப்

சம்மர் கேம்ப்: மிரளவைக்கும் உண்மைகள்

Published On 2020-09-17 03:26 GMT   |   Update On 2020-09-17 03:26 GMT
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
கோடைகாலம் வந்துவிட்டது. குழந்தைகள், கொரோனா பீதியால் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். ஊரடங்கு காலம் முடிந்ததும், குழந்தைகள் சுதந்திரமாக தங்களை ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ள அவர்களை ‘சம்மர் கேம்ப்’களில் சேர்த்துவிடலாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுண்டு. அந்த பயிற்சி முகாம்களில் குழந்தைகள் நீச்சல், தற்காப்பு, நடனம், ஓவியம், இசைக்கருவிகளை மீட்டுதல், கையெழுத்து பயிற்சி, ஸ்கேட்டிங் பயிற்சி போன்றவைகளை பெற்று தங்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் ‘சம்மர் கேம்ப்’ நடத்துபவர்களில் சிலர் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். சரியான கட்டமைப்புகள் அவர்களிடம் இருக்காது. கோடை காலம் முடிவதற்குள் பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முகாம் நடத்துகிறவர்களிடம், உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடக்கூடாது. கடந்த காலங்களில் சில முகாம்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கூட நிகழ்ந்திருக்கின்றன. அதனால் குழந்தைகள் மனோரீதியாக பாதிக்கப்படும் சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆகவே உங்கள் மகள், மகனை சம்மர் கேம்ப் களுக்கு அனுப்புவதாக இருந்தால், நீங்கள் நிறைய விஷயங்களை கவனித்து தரமான முகாமை தேர்ந்தெடுக்கவேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, இது தொடர்பாக நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுங்கள். முக்கியமாக உடல் உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறுங்கள். அதோடு ‘உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள்ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ, அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல’ என்பதை புரிய வையுங்கள். தவறான தொடுதல் எது?, சரியான தொடுதல் எது? என்பதையும் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுங்கள்.

நீங்கள் உங்கள் குழந்தையை சேர்க்க விரும்பும் முகாம் பற்றி, முழுமையாக விசாரியுங்கள். அதை நடத்துபவர்களின் பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து, திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள். தினமும் பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொட்டால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். சந்தேகத்திற்கு இடமான எல்லா விஷயங்களையும் குழந்தைகளிடம் விளக்கமாக கேளுங்கள்.

பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர் களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள். டான்ஸ் பயிற்சி கொடுக்கும் ஒருவர், பயிற்சி பெறும் சிறுமியிடம் வேண்டுமென்றே பாலியல் ரீதியாக தொடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிறுமிக்கு அவரது தொடுதல், பயிற்சி தொடர்புடையதா? அல்லது தவறான எண்ணத்திலானதா? என்று வகைப்படுத்தி பார்க்க முடியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் சிறுமிகள் தடுமாறுவார்கள்.

சிறுவர்களுக்கோ, சிறுமியர்களுக்கோ பாலியல் ரீதியான அணுகுமுறையை அடையாளம் காணும் பக்குவம் இல்லாததால், அவர்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடிவதில்லை. அப்படியே முடிவுக்கு வந்து பெற்றோரிடம் சொன்னாலும், அவா்கள் சொல்வதை எந்த பெற்றோரும் உடனடியாக நம்புவதும் இல்லை. முதலில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். ‘நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்’ என்று கூறி, முழு விவஇஇரத்த ையும் கேட்க வேண்டும். பயிற்சியாளர் மிக நல்லவர் என கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.

பயிற்சிக்கு செல்லும் இடங்களில் உங்கள் குழந்தைகள் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டாம். ஒருசில குழந்தைகள் மற்ற குழந்தைகளை சார்ந்திருக்காமல், தனியாக இருப்பார்கள். பாலியல் தொந்தரவு கொடுக்க விரும்புகிறவர்கள், அந்த மாதிரி தனிமையை விரும்பும் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த குழந்தைகளுக்கு பயிற்சியில் முக்கியத்துவம் கொடுப்பது போலவும், அவைகள் மீது தனிப்பட்ட அக்கறை தனக்கு இருப்பது போல் நடந்துகொள்வார்கள்.

மற்றவர்கள் முன்னால் தனக்கு மரியாதை அதிகம் கிடைக்கும்போது, அந்த குழந்தை மகிழ்ந்துபோய் அந்த பயிற்சியாளரிடம் அன்பு செலுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிய பின்பு, அவர் தனது கைவரிசையை காட்டத் தொடங்குவார். அது தவறானது என்பதை குழந்தை உணர்ந்து வெளிப்படுத்த முன்வரும்போது, ‘இது ஒருவித விசேஷ பயிற்சி. நீ இந்த பயிற்சியை பற்றி மற்ற தோழிகளிடம் சொல்லக்கூடாது. சொன்னால் உனக்கு இந்த ஸ்பெஷல் பயிற்சி தரமாட்டேன்’ என்று கூறி குழந்தையை மிரட்டுவார்.

சிலர் குறிப்பிட்ட குழந்தைகளை அழைத்து செல்போனில் இருக்கும் படங்களை காட்டுவார்கள். முதலில் சாதாரண படங்களை காட்டும் அவர்கள், பின்பு பாலியல் தொடர்புடைய படங்களைக்காட்டி, ‘எதுவும் தவறில்லை’ என்பது போன்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளை தன்வசப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் ‘ஒரு நிறு வனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு’ என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

இவைகளை எல்லாம் நன்றாக புரிந்துகொண்டு, உங்கள் குழந்தைகளை கோடைகால முகாம்களுக்கு தயாராக்குங்கள்.
Tags:    

Similar News