லைஃப்ஸ்டைல்
பெற்றோரின் அரவணைப்பில் மலையேறும் சுட்டிகள்

பெற்றோரின் அரவணைப்பில் மலையேறும் சுட்டிகள்

Published On 2020-09-01 06:46 GMT   |   Update On 2020-09-01 06:46 GMT
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும். ஆனால் லியோ - ஜெசிகா ஹால்டிங் தம்பதியரோ தங்களின் குழந்தைகளை சாகச பயணங்களில் ஈடுபடவைத்து அசத்தி இருக்கிறார்கள்.

மலையேற்றம் செய்வதுதான் இந்த தம்பதியருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மலையேற்றம் செய்ய சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு 7 வயதில் ப்ரேயா என்ற மகளும், 3 வயதில் ஜாக்சன் என்ற மகனும் இருக்கிறார்கள். அவர்களின் விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிய வேண்டும் என்று விரும்பியவர்கள், தங்களின் சாகச பயணத்திற்கு உடன் அழைத்து சென்று ஆனந்தப்படுத்தி இருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து-இத்தாலி நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிஸ் பாடிலே மலை சிகரத்திற்கு குடும்பத்துடன் மலையேற்றம் மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 11 ஆயிரம் அடி கொண்ட அந்த மலை சிகரத்தின் மீது தாயின் அரவணைப்புடன் சிறுவன் ஜாக்சன் பயமின்றி மலையேறும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஜாக்சனை ஜெசிகா முதுகில் சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக மலை ஏறுகிறார். தனக்கு முன்னால் மகள் ப்ரேயாவை கயிற்று முனையில் நடக்க விட்டு பின் தொடர்கிறார். ப்ரேயாவும் பயமின்றி தந்தைக்கும், தாய்க்கும் இடையே கயிற்றின் பிடியில் உற்சாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். லியோ பயணத்திற்கு தேவை யான உடமைகளை முதுகில் சுமந்து சென்றபடி மகளுக்கு வழிகாட்டுகிறார். மூன்றே நாட்களில் சாகச பயணத்தை முடித்து அசத்தி இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு மட்டும் மலையில் தங்கி இருக்கிறார்கள்.

“சில ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் கொஞ்ச நாட் கள் மலையேற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் நெருங்கும்போது குழந்தைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள். கடந்த ஆண்டுகளை விட தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்லோவேனியாவில் உள்ள டிரிக்லாவ் மலை சிகரத்திற்கு சென்றிருக்கிறோம். ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது இந்த மலை சிகரம் சிரமமானது” என்கிறார், லியோ.
Tags:    

Similar News