பெண்கள் உலகம்
குழந்தைகளின் உடலுக்கு ஆயில் மசாஜ்

குழந்தைகளின் உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா?

Published On 2020-07-30 10:26 IST   |   Update On 2020-07-30 10:26:00 IST
ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்.
ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை பெற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் குழந்தையின் தசையும் பலமடையும்.

நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.

Similar News