பெண்கள் உலகம்
கை கழுவலாம் வாங்க

குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி?

Published On 2020-06-04 10:47 IST   |   Update On 2020-06-04 10:47:00 IST
குழந்தைகளைப் பொறுத்துவரை நோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அதிக கவனம் அவசியம். வீட்டிற்குள் இருந்தாலும் சில சுகாதார விஷயங்களைக் கையாளுவது அவசியம்.
கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளை வீட்டிற்கு உள்ளேயே வைத்து பாதுகாப்பாக பார்த்து வருகிறார்கள். இருப்பினும் வீட்டிற்குள் இருந்தாலும் சில சுகாதார விஷயங்களைக் கையாளுவது அவசியம். ஏனெனில் குழந்தை வீட்டிற்குள் இருந்தாலும் பெரியவர்கள் வெளியில் சென்று வரக்கூடும். எனவே இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்.

குழந்தைகள் அடிக்கடி கை வைக்கும் இடங்களை கிருமிநாசினி கொண்டு துடைத்து சுத்தமாக வையுங்கள்.வீட்டின் தரையை அடிக்கடி துடைத்து வையுங்கள்.

அவர்களுக்கு உணவு கொடுக்கும் முன் உங்கள் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். குழந்தையின் கைகளையும் கழுவி விடுங்கள்.

அவ்வபோது குழந்தைகளின் கைகளையும் கழுவிவிடுதல் நல்லது.

வெளியே சென்று வந்தால் கைகளைக் கழுவுங்கள். முடிந்தால் குளித்துவிட்டு குழந்தைகளோடு விளையாடுங்கள்.

அவர்களை தினமும் குளிக்க வைத்து சுத்தமான ஆடைகளை உடுத்துங்கள். தினமும் 2 முறை குளிக்க சொல்லுங்கள்.

உணவில் அதிகம் காய்கறி , பழங்கள் , நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அதிகம் கொடுங்கள்.

சோஃபா, கட்டில் உள்ளிட்ட ஃபர்னிச்சர்களில் குழந்தைகள் அதிகம் விளையாடக் கூடும். எனவே அவற்றை வேக்யூம் கிளீனர் கொண்டு துடையுங்கள். அதன்மேலே உறைகளை தினமும் மாற்றுங்கள்.

அவர்களுக்கு உணவு அளிக்கும் பாத்திரங்களை சுடுதண்ணீரில் அலசிவிட்டு கொடுக்கலாம்.

ஏதாவது காய்ச்சல், இருமல் எனில் மருத்துவரை ஃபோனில் அழைத்து ஆலோசனை பெறுங்கள்.

Similar News